செய்து பாருங்கள் - பட்டன் கரடி அட்டை!
தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்!செய்யலாமா குட்டீஸ்...?1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும்.2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்)3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ஒட்டவும். (இப்போது கரடிக்கு கைகள் மற்றும் கால்கள் வந்துவிட்டனவா?)4. இரண்டு சிறிய பர்ப்பிள் பட்டன்களை எடுத்து தலையின் மேல் இருபுறமும் ஒட்டி காதுகளை உருவாக்குங்கள்!5. இறுதியாக ஒரு வெளிர் பிங்க் கலர் சிறிய பட்டனை தலையின் கீழ் பகுதியில் ஒட்டி வாய் மற்றும் மூக்கு பகுதியை உருவாக்குங்கள்.இப்போ செம, 'க்யூட்டான ' பட்டன் பியர் கார்டு ரெடி. உள்ளே உங்க பர்த்டே விஷஸை எழுதி பிரண்ட்ஸ்க்கு கொடுத்து அசத்துங்க குட்டீஸ்...