உள்ளூர் செய்திகள்

கிழங்கு பாயசம்!

தேவையான பொருட்கள்:சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்சர்க்கரை - 200 கிராம்தேங்காய் பால் - 1 கப்பசும் பால் - 3 கப்தேன் - 1 தேக்கரண்டிஏலக்காய் பொடி, தண்ணீர், குங்குமப்பூ - சிறிதளவு செய்முறை:சர்க்கரை வள்ளிக் கிழங்கை, தோல் சீவி, துண்டுகளாக்கி, தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். அதனுடன், தேங்காய் பால் கலந்து கொதிக்க விடவும். சுண்டியதும், சர்க்கரை, சூடான பசும்பால் சேர்த்து கிளறவும். பின், தேன், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்க்கவும். சுவை மிக்க, 'கிழங்கு பாயசம்' தயார். சத்து மிக்கது.- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !