உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

எண்களை இணைத்தல், புதிர்களை விடுவித்தல் என, சிறுவர்மலர் இதழை, சிறுமியாக இருந்த போதே கற்கத் துவங்கினேன். அறிமுகப்படுத்தியவர், என் அத்தை பாரதி சுப்ரமணியன். இளமைப் பருவத்தில் பழகியது, 50 வயதிலும் தொடர்கிறது.சனிக்கிழமையானால், சிறுவர்மலர் வருகைக்காக காத்திருப்பேன். அலமாரியில் பத்திரப்படுத்திய பின்தான், குளிக்கவே செல்கிறேன். பூஜை முடித்து, ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படிப்பதுடன், புதிர் பகுதிகளையும் விடுவிப்பேன். எண்களை இணைத்து, படம் வரைவேன்.குழந்தை தனத்தை இழக்காமல், எந்த வயதிலும், குதுாகலிக்க வைக்கிறது சிறுவர்மலர் இதழ். வாழையடி வாழையாக, அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளேன். நல்ல தமிழுடன், அறம் நிறைந்த பழக்க வழக்கங்கள் வளர வித்திட்டு வருகிறது சிறுவர்மலர் இதழ்!- லட்சுமி ரகுகுமார், சென்னை.தொடர்புக்கு: 98411 58018


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !