உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 69; குடும்பத்தில் அனைவரும் தினமலர் நாளிதழின் தீவிர ரசிகர்கள். வயதை மறந்து, உற்சாகமடைய சிறுவர்மலர் இதழை படிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன். அதில், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியை முதலில் படித்து, சிரித்து மகிழ்வேன்.அடுத்து, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை படித்ததும், பள்ளி நாட்களில் நிகழ்ந்ததை இனிய நினைவுடன் அசை போடுவேன். இது, 'டீன் ஏஜ்' மாணவியாக மனதளவில் கற்பனை செய்து, சந்தோஷப்பட வைக்கிறது.குழந்தைகள் வரைந்த படத்தை ரசித்து பார்ப்பேன். அடுத்து, 'அதிமேதாவி அங்குராசு!' கட்டுரையை படித்து, அறிவை வளர்த்துக் கொள்வேன். குழந்தைகள் முதல், பெரியோர் வரை அனைவரும் சிறுவர்மலர் இதழை விரும்பி படிப்பதை கண்டு மகிழ்கிறேன். இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.அறிவியல், ஓவியம், ஆலோசனை, கதை மற்றும் பொது அறிவு என, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே இதழ் சிறுவர்மலர் தான்! - கே.சூடாமணி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !