உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 42; தங்க நகை தயாரிக்கும் தொழில் செய்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம், குகன்பாறை கிராமத்தில் வசித்து வந்தேன். அப்போது, சிறுவர்மலர் இதழில், 'உயிரைத் தேடி!' என்ற படக்கதை வெளியானது. மிகவும் விறுவிறுப்பாய் இருக்கும். அந்த ஊரில், இரண்டு டீக்கடைகள் இருந்தன; ஒன்றில், தினமலர் நாளிதழ் வாங்குவர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளியில் வகுப்பு முடிந்ததும், புத்தகப் பையை வீட்டில் வைத்து, அந்த டீக்கடைக்கு ஓடுவேன். அதற்குள், சிறுவர்மலர் இதழை கைப்பற்றி படித்து கொண்டிருப்பர் என் நண்பர்கள். காத்திருந்து மனம் கவர்ந்த இதழில் படக்கதையில் துவங்கி, கடைசிப் பக்கம் வரை படித்தால் தான் திருப்தி ஏற்படும்.அந்த காலத்தில் என் வாசிப்பு பயிற்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது, சிறுவர்மலர்; புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கும், பிள்ளையார் சுழி போட்டது!என் குழந்தைகளோடு, இன்றும் அதே உற்சாகத்துடன், சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன்.- பி.செல்வராஜ், கோவை.தொடர்புக்கு: 78710 57943


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !