உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 74; யோகா ஆசிரியராக பணியாற்றுகிறேன். பலருக்கு இலவசமாக யோகக்கலையை கற்று தருகிறேன். சிறுவர்மலர் இதழை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். யோகா பயிற்சிக்கு வருவோரையும் படிக்க பரிந்துரைக்கிறேன். பலரும், 'அதிமேதாவி அங்குராசு!' மற்றும் 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதிகளை விடாமல் தொடர்ந்து படிப்பதை காண்கிறேன். ஒவ்வொரு வாரமும் சிறுவர், சிறுமியர் உயர்வுக்காக அரிய செய்திகளை தருகிறது. நல்ல அறிவுரையுடன் தன்னம்பிக்கை ஊட்டுகிறது. உதவும் குணத்தை வளர்க்கும் தொடர்கதை சிறப்பு சேர்க்கிறது.முயற்சிக்கும், உயர்வுக்கும் ஊக்கம் தரும் ஆக்கங்கள் அதிகமாக உள்ளன. என்னிடம் பயிற்சி பெற வருவோர், சிறுவர்மலர் இதழ் வாசகராகவும், ரசிகராகவும் மாறிவருகின்றனர். இது பெருமை தருகிறது. வாழ்க... வளர்க சிறுவர்மலர்!- டி.ஆர்.சந்திரபிரகாஷ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !