வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 54; அரசு உதவி பெறும் துவக்க பள்ளி நிர்வாகியாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன். வீட்டில் உருவாக்கியுள்ள நுாலகத்தில் அவற்றை பாதுகாக்கிறேன். மனதைத் தொடும் வகையிலான பள்ளி நினைவுகள், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் இளமை காலத்துக்கு திரும்ப வைக்கிறது. குழந்தைகளுக்கு, 'படக்கதை!' தொடர் விருந்து அளிக்கிறது. சுவாரசியம் தருகிறது தொடர்கதை. தகவல்கள் நிறைந்த, 'அதிமேதாவி அங்குராசு!' பயனுள்ள குறிப்பேடு பெட்டகம். உற்சாகம் மிக்க, 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள் பேரானந்தம் தருகிறது. சாப்பாடு பிரியர்களுக்கு, 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' வர பிரசாதம். கணித விளையாட்டும், புதிர் போட்டியும் அறிவை விரிவுபடுத்துகின்றன. சிந்திக்க வைத்து மனதுக்கு கடிவாளம் போடுகிறது சிறுகதைகள்; ஓவியம் வரையும் பயிற்சியை வழங்குகிறது, 'உங்கள் பக்கம்!' பகுதி. வாழ்வை ஒளிமயமாக்கும் வெற்றிப் பாதையை, 'இளஸ்... மனஸ்...' வகுத்து தருகிறது. செயல் வீரர்களை அடையாளம் காட்டும் ஆற்றல் மிக்க மூளைத்திறனாக, 'வீ டூ லவ் சிறுவர்மலர்!' இருக்கிறது. சிற்றரசர்களின் சிம்மாசனமாக, 'குட்டி குட்டி மலர்கள்!' விரிகிறது. சிறுவர், சிறுமியரை புதிய பாதையில் அழைத்துச் செல்லும், பாதுகாப்பு பெட்டக தேராக நகரும் சிறுவர்மலர் இதழ் சேவை, என்றும் தொடர வாழ்த்தி வணங்குகிறேன்!- சே.க.கலிபத்துல்லா, கள்ளக்குறிச்சி.