வி டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது 65. அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். பொது நுாலகத்தில் புத்தகம் வாசிப்பதை தவறாமல் கடைபிடிக்கிறேன். சனிக்கிழமை என்றால் சிறுவர்மலர் இதழை தவற விடமாட்டேன். முழுமையாக படித்து விடுகிறேன். என் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' மனக் கண்ணில் கொண்டு வருகிறது. சிறுகதையை படித்து என் பேத்திக்கு சொல்ல தவறுவது இல்லை. குழந்தைகளின் புகைப்படங்களை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது. அட்டை டூ அட்டை சிறுவர் முதல் பெரியவர் வரை கவரும் வகையில் உள்ளது. இதழ் தொடர்பான விமர்சனங்களை, 'வாசகர் பகுதி!' யில் தெரிவிக்க தடை ஏதும் இல்லை. சிறுவர்மலர் இதழ் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துகிறேன். - ரா.ஸ்ரீனிவாசன், பெங்களூரு.