ஒரே இடத்திலேயே வேலை, உணவு, வாழ்க்கை!
பசியெடுத்தால் விலங்குகள் உணவை தேடி வேட்டையாட கிளம்பும். ஆனால், அப்படி போக தாவரங்களால் முடியாது. அதற்கு ஈடாக, தாவரங்கள் தங்கள் உணவை சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் கார்பன்-டை ஆக்ஸைடு ஆகியவற்றை பயன்படுத்தி தாங்களே, தயார் செய்து கொள்கின்றன. இந்த தாவர வழி உணவு உற்பத்திக்கு 'போட்டோஸின்தஸைஸ்' என்று பெயர். இது பகலில் சூரிய ஒளி இருக்கும் போதும் நடைபெறும். இலைகள் சூரிய ஒளியை கிரகித்து கொள்ளும்.சூரியனை நோக்கி...இந்த தாவரங்கள் பெரிய தாவரங்களின் நிழலில் வாழ்கின்றன. அதனால், இவைகளின் இலைகள் விசிறி போல அமைந்துள்ளன. இதன் மூலம் சூரிய ஒளியை இம்மரம் பெறுகிறது.அழகான வண்ணங்கள்!எல்லா இலைகளிலும் இந்த பச்சை க்ளோரோபில் உண்டு. ஆனால், சில இலைகளில் பச்சை வண்ணம் பார்வையிலிருந்து மறைந்து வேறு விநோத வண்ணங்கள் பார்வைக்கு தென்படும்.இரவு ரெஸ்ட்!சூரிய ஒளியில்லாமல் தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது. இரவு ஆனதும் தங்கள் உணவு தயாரிக்கும் பணியை நிறுத்திவிடும்.போட்டோஸின்தஸிஸ்!இலைகளில் உள்ள க்ளோரோபில் சூரிய ஒளியை கிரகித்து கொள்கிறது. சூரிய ஒளி கொடுத்த சக்தியை கொண்டு தாவரம் தண்ணீரையும் கார்பன்-டை ஆக்ஸைடையும் உணவாக மாற்றுகிறது.இலைகளுக்கு டாட்டா!பனிகாலத்தில் தண்ணீர் குறைவாகவே கிடைக்கிறது. பெரும்பாலும் உறைந்துவிடுகிறது. அதனால் உணவு உற்பத்தி வெகு குறைவாகவே தாவரத்தில் நடைபெறு கிறது. தாவர வளர்ச்சியும் வெகு குறைவுதான். பெரும் பாலான மரங்கள், இலைகளை உதிர்த்துவிடும்.* எல்லா இலைகளிலும் பச்சை தன்மையை தரும் ஒரு சிறப்பு பொருள் உண்டு. அதன் பெயர் க்ளோரோபில்* இந்த வேர்கள் மண்ணிலிருந்து தண்ணீரை எடுத்து கொள்கிறது. வேரிலிருந்து அடி மரம் வழியாக தண்ணீர் இலைகளுக்கு செல்கிறது.*சில உணவு வகை சாறு போல் ஆகிவிடும். அந்த உணவு சாறு இலைகளிலிருந்து தாவரங்களை சுற்றி வழிந்து தாவரத்திற்கு உணவாகி சக்தி தருகிறது.* தாவரங்கள் உணவு தயாரிக்கையில் அவை ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது.* காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு இலைகளுக்குள் புகுகிறது.* சில உணவு சேமிப்பு இலைகளில் செய்யப்படுகிறது.* இலைகள் சூரியனிலிருந்து ஒளியை பெறுகிறது.