16 ஆயிரம், டாய்லெட்கள்!
இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவன பவுண்டேஷனின் சேர்மன், சுதாமூர்த்தி. 34 புத்தகங்கள் எழுதியுள்ளார். சமீபத்தில், அமிதாபச்சன் நடத்தும், கோன்பனேகா குரோர்பதி, 11ன் இறுதி நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராக பங்கேற்றார். அப்போது, அவர் பகிர்ந்த தகவல் இதோ:'இந்தியா முழுவதும், 16 ஆயிரம், 'டாய்லெட்'களை அமைத்து தந்துள்ளீர். இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா...' என, கேட்கப்பட்டது.'நான் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தபோது, எங்கள், 'பேட்சில்' மொத்தம், 600 மாணவர்கள் இருந்தனர். நான் ஒருவள் மட்டுமே பெண். கல்லுாரியில், பெண்களுக்கென, தனி, 'வாஷ் ரூம்' கிடையாது; 'டாய்லெட்'டின் நிலைமை சொல்லவே முடியாது. இத்தகைய சூழலில், வருங்காலத்தில், முடிந்த அளவு, 'டாய்லெட்'களை உருவாக்கி தரவேண்டும் என, நினைத்தேன். அதன் விளைவு தான், 16 ஆயிரம், 'டாய்லெட்'கள்...' என்றார்.- ஜோல்னாபையன்