உள்ளூர் செய்திகள்

17 லட்சம் ரூபாய்க்கு குழந்தை பொம்மைகள்!

பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் விக்கி ஆண்ட்ரூஸ். வயது 25. இவருக்கு குழந்தைகள் மீது கொள்ளை ஆசை. எப்போதும் குழந்தைகளுடன் இருப்பதையே விரும்புவார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இவரை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் குறைபாடு இருப்பதாகவும், இதனால், இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். ஆண்ட்ரூவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆயிரக்கணக்கில் செல வழித்து மருத்துவம் பார்த்தும், 'நோ சான்ஸ்' என, உதட்டை பிதுக்கி விட்டனர் டாக்டர்கள்.கவலையை மறப்பதற்காக, குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மை களை வாங்கி, அவற்றுடன் கொஞ்சி விளையாடினார். நாளடைவில், பொம்மை களே, அவரின் முழு நேர பொழுது போக்காகி விட்டது. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தாலும், உடனடியாக ஓடிச் சென்று, குழந்தை பொம்மைகளை வாங்கி வந்து விடுவார்.நேரில் பார்த்தால், அசல் குழந்தை போலவே தோற்ற மளிக்கும் இந்த பொம்மை கள், அதிக விலை உடையவை. இந்த பொம்மைகளை வாங்கி, அவற்றுக்கு விதம் விதமாக உடைகளை அணிவித்து, அழகு பார்த்து, கொஞ்சி விளையாடி வருகிறார்.இதுவரைக்கும், பொம்மைகளை வாங்கு வதற்காக, 17 லட்சம் ரூபாயை செலவிட்டு உள்ளார். 97 பொம்மைகளை வாங்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியில் சென்றால் கூட, பொம்மைகளை எடுத்துச் செல்ல தவறுவது இல்லை. ஆண்ட்ரூவின் படுக்கை அறையை, இந்த குழந்தை பொம்மைகள் தான் ஆக்ரமித்துள்ளன.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !