உள்ளூர் செய்திகள்

ரூ.75 லட்சம் பரிசு!

அமெரிக்காவைச் சேர்ந்த, 'விட்டமின் வாட்டர்' என்ற நிறுவனம், 'கோக்' நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படுகிறது. இந்த நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு தான், அமெரிக்காவில், பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.'ஒரு ஆண்டுக்கு, 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்தாமல் இருந்தால், 75 லட்சம் ரூபாய் பரிசு!' என்பது தான், அந்த அறிவிப்பு. இது தொடர்பான நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோர், இந்த போட்டியில் பங்கேற்கலாம்.குறிப்பிட்ட காலத்தில், போட்டியாளர்கள், எந்த காரணத்தை முன்னிட்டும், 'ஸ்மார்ட் போனை' பயன்படுத்தவே கூடாது. அதற்கு பதிலாக, 1996 மாடல், மொபைல் போன் தரப்படும்; அதை, பயன்படுத்தலாம்.'போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், பல கட்ட சோதனைகளுக்கு பின்பே, ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதிக்கப்படுவர். போட்டி பற்றிய விரிவான விபரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்...' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !