வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் புத்தகப் பை!
ஜப்பான் நாட்டில், அடிக்கடி பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர் நிகழ்வதுண்டு. இதனால், அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, 'ராண்டோ செரு' என்ற இந்த புத்தகப்பையை மாணவர்கள், கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். காரணம், உயிர்காக்கும் 'லைப் ஜாக்கெட்'டாக இது செயல்படுகிறது. பூகம்பம் வருகையில் இதை, விரித்து தலை மேல் கவசமாக பயன்படுத்தலாம். அதேசமயம், சுனாமி பேரிடர் ஏற்படும் நேரத்தில், இந்த பை மிதக்கும் தன்மை கொண்டிருப்பதால், பையை விரித்து 'ஜாக்கெட்'டாகவும் மாணவர்கள் அணிந்து பயன்படுத்தலாம். தண்ணீரில் மூழ்காமல், மாணவர்களை இது காப்பாற்றும். இந்தப் பையின் விலை, இந்திய மதிப்பில், 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். — ஜோல்னாபையன்