டைட்டானிக் நாயகியின் புதிய தோற்றம்!
'டைட்டானிக்' படத்தை பார்த்த ரசிகர்களின் இதயங்களில், பெவிக்கால் போட்டு, 'பச்சக்' என்று, ஒட்டிக் கொண்ட, கேத் வின்ஸ்லெட்டை, யாரும், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த அளவுக்கு, ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய, கேத் வின்ஸ்லெட்டின் புதிய அவதாரத்தை தான், இந்த படத்தில் பார்க்கிறீர்கள். ஏற்கனவே, இரண்டு பேரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட கேத், தற்போது, ரெட் ராக்நார்ல் என்ற நடிகரை, மூன்றாவதாக, திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, விரைவில், மூன்றாவது குழந்தைக்கு தாயாகப் போகிறார். கர்ப்பமடைந்ததில் இருந்து, அதிகம் வெளியில் வராமல் இருந்த கேத், சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்புறம் என்ன...புகைப்படக்காரர்களுக்கு ஒரே வேட்டை தான். வளைத்து வளைத்து, கேத் வின்ஸ்லெட்டின் வித்தியாசமான தோற்றத்தை, படமாக எடுத்து தள்ளி விட்டனர்.- ஜோல்னா பையன்.