கவிதைச் சோலை!
உறவெனும் ஒரு கை ஓசை! உறவென்னும் பந்தம்நம்மை இணைப்பதாகஇறுமாந்திருக்கும் மாந்தரே...கருவின் மூலம் வரும் உறவைதொப்புள் கொடியைஅறுப்பது போல் அறுத்துசெல்லும் பிள்ளைகளாநம் உறவு?பணமிருந்தால் வட்டமிட்டுகஷ்டத்தில் கணப்பொழுதில்மறையும் சுற்றமோநம் உறவு?பதவியில் இருக்கையில்பதிவிசாக சாமரம் வீசிபலவும் சாதித்துபின் பார்த்தும் பார்க்காமல்மறையும் மனிதரோநம் உறவு?கூடிக் குடித்து கும்மாளமிட்டுகுதூகலித்து பின்காலப்போக்கில் மறையும்நண்பர்களோ நம் உறவு?அவன் அடிபட்டால்எனக்கு வலிக்க வேண்டும்அவன் துன்பத்தில்என் கண்கள் கலங்க வேண்டும்அவன் சிரித்தால் நான்மலர வேண்டும்அவன் பேசாவிடிலும் நான்அவனை நினைக்க வேண்டும்கண்ணால் பார்க்காத போதும்காதில் கேட்காத போதும்கட்டித் தழுவாத போதும்காத தூரத்தில் இருந்தபோதும்எத்தனை காலமானலும்யாரை நினைத்தால் மனம்மலர்கிறதோ, மகிழ்கிறதோஅதுதான் நம் உறவு!அது எங்கிருந்தாலும்உறவாக உணராவிட்டாலும்அது ஒரு வகையில்ஒரு கை ஓசையே! — ஜி.சுவாமிநாதன், சென்னை.