அன்று கொள்ளையன்; இன்று சமூக சேவகர்!
உ.பி., மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவன் பஞ்சம் சிங்கின். இவன், நுாற்றுக்கும் மேற்பட்ட செல்வந்தர்களை கொலை செய்தவன். கடந்த,1972ல் ஜவ்ரா காந்தி ஆசிரமத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன் சரணடைந்தார். அவருடன் சரணடைந்த நுாற்றுக்கணக்கான கொள்ளையர்கள், 1980ல் விடுதலை பெற்றனர். பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து, ஏழைகளுக்கு உதவி இருக்கிறார் இவர். நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பல கோவில்களையும், பள்ளி ஒன்றையும் கட்டியுள்ளார். மத்திய பிரதேசம், பிங் மாவட்டம், சிங்புரா கிராமத்தில் பிறந்த இவர், தன் 12வது வயதில், துப்பாக்கி ஏந்தி, நுாற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று, இன்று, மனிதநேய அமைப்புகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார், 'மாஜி' சம்பல் ஹீரோ!— ஜோல்னாபையன்.