ஆண்களே இல்லாத கிராமம்!
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர். 'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?— ஜோல்னா பையன்.