உள்ளூர் செய்திகள்

ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!

உலக சாதனைக்காக, அதில் ஆர்வம் உள்ளவர்கள், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கையில், சீனாவைச் சேர்ந்த ஒருவர், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஒற்றை விரலில், ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவர் பெயர், ஜியோ குஜோங்.தன் ஆள் காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி, உடலை, தரையில் அழுத்தி அழுத்தி, 30 வினாடிகளில், 41 முறை எழுந்து, இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், தன் சாதனையை, தானே முறியடிக்கும் வகையில், கடும் பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார், ஜியோ.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !