அந்தரத்தில் அசத்தும் அழகிகள்!
சில அடி உயரத்தில் ஏறி நின்று, கீழே பார்த்தாலே, தலை சுற்றி விழுந்து விடுவோம், நாம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த, எமிலி சிகெய்னி, ஹெய்லி அஷ்பர்டன் என்ற இளம் பெண்கள், சர்வ சாதாரணமாக, 33 ஆயிரம் அடி உயரத்தில், இரு மலை முகடு களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து, மற்றவர்களை பதற வைக்கின்றனர்.கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யெஷ்டின் தேசிய பூங்காவில் தான், இந்த பரபரப்பான நிகழ்வு அரங்கேறி யது. இந்த இரண்டு பெண் களும், கயிற்றின் மேல், அந்தரத்தில் நடந்து சென்ற தோடு, அதே கயிற்றில், அமர்ந்து, கை, கால்களை மேலும் கீழும் அசைத்து, ஆச்சரியப்படுத்தினர்.இந்த அதிசய காட்சிகளை, கேமராவுக்குள் பதிவு செய்த, ஜெரோட் அல்டன் என்ற புகைப்படக் கலைஞர், 'அம்மாடியோவ்... என்னால், இப்படி ஒரு சாதனையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இன்னும், பல அற்புதமான சாதனைகளை செய்து, உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகின்றனர், இந்த இளம் பெண்கள்...' என, வியப்புடன் கூறுகிறார்.— ஜோல்னா பையன்.