கண் கலங்க வைத்த புகைப்படம்!
சமீபத்தில், ஊடகங்களில் காணப்பட்ட, இக்குழந்தையின் புகைப்படம், அனைவரையும் கண் கலங்க வைத்தது. சிரியா நாட்டு அகதியான இக்குழந்தை, கடலில் முழ்கி இறந்து, கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்த காட்சியை, படம் எடுத்தவர், ஒரு பெண் பத்திரிகையாளர்; பெயர், நிலோபர் டெமிர். உலகில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும், அங்கு, தன் கேமராவுடன் சென்று, சோக காட்சிகளை படம் பிடிப்பதில், இவருக்கு ஆர்வம் அதிகம். 'நான் பதிவு செய்த இப்படம், உலகப்புகழ் பெறும் என்று நினைக்கவில்லை...' என்றார் நிலோபர்.— ஜோல்னாபையன்.