உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

என்.வி.அசோக்ராஜா, அம்பத்தூர்: சினிமா பார்த்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டது உண்டா அந்துமணியாரே...ஓ... வருடத்திற்கு ஒன்று இரண்டு. அதுவும் பலரும்,'நல்லா இருக்கு' என்ற பின் தான், படம் பார்ப்பது எனும் பாடம்!ம.பாண்டி, சீலையம்பட்டி: எண்பது வயதாகும் ஒரு நபர், தன் மனைவியுடன், தான் சம்பாதித்து கட்டிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அவருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளும் நல்ல விதத்தில், 'செட்டில்'ஆகி வெளியூர்களில் இருக்கின்றனர். அந்த பிள்ளைகள் பலருக்கு தகப்பனாரின் வீட்டின் மீது ஒரு கண்; அதை விற்று பங்கு போட எண்ணுகின்றனர். இதற்காக தகப்பனாரிடம், 'வயசான காலத்தில் ஏன் தனியா இருக்கணும்... வீட்டை வித்துட்டு எங்களோடு வந்து இருங்களேன்...' என்கின்றனர். என்ன செய்வது?பிள்ளைகளிடம், 'வீட்டை விற்கப் போவது இல்லை; அதை வாடகைக்கு விட்டு விட்டு, உங்களுடன் வந்து தங்குகிறேன்...' எனக் கூறிப் பார்க்கட்டும், அப்போது, உண்மையிலேயே பெற்றோரின் நலத்தைத்தான் விரும்புகின்றனரா என்பது தெரிந்து விடும். எக்காரணம் கொண்டும், பெரியவர், வீட்டை விற்காமல் இருப்பது நலம்!பெ.அமுதா, கடலூர்: மகளைத் தந்தை கற்பழித்தார், 5 வயது சிறுமி கற்பழிப்பு போன்ற செய்திகளே பத்திரிகைகளில் நிறைய வருகின்றன. இது போன்ற குற்றங்களுக்கு, ஈராக் போன்ற நாடுகளில் விதிப்பது போல கடும் தண்டனை இந்தியாவிலும் விதிக்க சட்டத்தை மாற்றினால் என்ன?மாற்றினால்... சட்டம் இயற்றுபவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வார்களே!எஸ்.முனியாண்டி, பள்ளத்தூர்: 'தமிழா இன உணர்வு கொள்' என்கின்றனரே... எதற்காக...இவன் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டே இருந்தால் தானே, அவன் மாட மாளிகை கட்ட முடியும்!பி.அபினயா, மேலூர்: வாசகியரிடம் இருந்து, 'எக்குத் தப்பான' கடிதங்கள் உங்களுக்கு வந்ததுண்டா?எக்குத்தப்பாக நான் எடுத்துக் கொள்வதில்லை!எம்.சிவனேஷ்வர், சென்னை: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்கு. ஆண்களுக்கு...போதும் ஐயா, போதும்! இந்த மோடிமஸ்தான் மந்திரங்களை இன்னும் போதித்து, பெண்களை முன்னேற விடாமல் தடுக்காதீர்கள்!ரா.சுரேந்திரன், கோவை: கோவில் விழாக்களில், 'சாமியாடுதல்'என்று கூறிக் கொண்டு, சாராயம் குடித்து விட்டு, 'குறி' சொல்வது தமிழகப் பழக்கம். மற்ற மாநிலங்களில் இவ்வழக்கம் உள்ளதா?மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல, கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகள், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளிலும், எல்லா மத்தினரிடையேயும் இந்த பழக்கம் உள்ளது. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !