அந்துமணி பதில்கள்
* ஜி. குப்புசாமி, சென்னை: உடல் உழைப்பை நம்பியே ஒருவன், வாழ்க்கையில் முன்னேறி விட முடியுமா?மூன்று சக்கர சைக்கிளில், சுமை துாக்கி தள்ளவே முடியும்; முன்னேற மூளை வேண்டும்!கணவர் வேலை போய் விட்டது, அமெரிக்காவில்... அவர் மனைவி, தமிழ் பெண், அதன் பின், இந்திய ஓட்டல் ஆரம்பித்து, இன்று, அமெரிக்கர்கள், இந்தியர்கள் என, 80 பேரை வேலைக்கு அமர்த்தி, கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்; மூளை வேண்டும் முன்னேற!எஸ். கண்ணன், மதுரை: 'குவாலிபிகேஷன்' இல்லாத தொழில் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்...வெள்ளை ஆடை அணிய தெரிந்திருந்தால் போதுமே! அதிலும் ஒரு சிலர், இப்போது, முழு, 'டவுசர்' மட்டுமே அணிகின்றனர்!* அ. செந்தில்குமார், கோவை: அரசு அலுவலகங்கள், 'டிஜிட்டல்' மயமாக்கும்போது, பணிகள் துரிதமாக நடக்குமா?'டிஜிட்டல்' மயமாக்குவோரையே, 'கவனித்து' விடும் திறமை, நம் அலுவலர்களுக்கு உள்ளதே... எப்போதும் போல் தான் நடக்கும்!பி.எஸ். பிரபாகரன், உடுமலைப்பேட்டை: பயணக்கட்டுரை எழுத, பொ.ஆ.,வின் அனுமதி கிடைத்ததும், எந்த புதிய நாட்டுக்கு செல்வதாக உத்தேசம்?தெற்கு பசிபிக் கடலில் உள்ள, நியூசிலாந்து; அடுத்து, ஒன்றிணைந்த சோவியத் ரஷ்யாவில் இருந்து, பிறகு உடைந்து போன நாடுகள். இங்கெல்லாம் தான், நகரங்களில் கூட அவசியம் இல்லாத பரபரப்பு வாழ்க்கை நிலவுகிறதாம்! பார்த்து வந்து சொல்கிறேன்; போய் வாருங்கள்! எம். ரவீந்திரகுமார், திருப்பூர்: ஊழல் குற்றச்சாட்டில், ஜாமினில் வெளிவந்துள்ள, ப.சிதம்பரம், தான் சிறை சென்று திரும்பியதை, வ.உ.சி., காமராஜர் போன்று பெருமையாகக் கருதுகிறேன் என்கிறாரே...ஒரே சிரிப்பு தான் போங்க... இதை, 'வாரமலர்' இதழ், தமாஷ் பகுதிக்கு அனுப்பி இருந்தாலும், பம்பர் பரிசாக, 1,500 ரூபாய் கிடைத்து இருக்கும்!* கல்பனா, சென்னை: குடியுரிமை திருத்த சட்ட மசோதா, நாட்டிற்கு, நன்மையா - தீமையா?நீங்கள், வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்கிறீர்கள்; முன், பின் தெரியாத பிச்சைக்காரன் வாசலில் நிற்கிறான். அவனிடம் சாவியைக் கொடுத்து, கணவர் வந்த பின், அவரிடம் கொடுக்கச் சொல்லி செல்வீர்களா?அது போல தான், குடியுரிமை திருத்த சட்ட மசோதா!