உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ராம் ஆதிநாராயணன், தஞ்சாவூர்:கவலைகளை மறக்க, புத்தகங்களைப் படிக்கலாமா? சினிமா பாடல்களைக் கேட்கலாமா? தமாஷ் காட்சிகளை, 'டிவி'யில் பார்க்கலாமா?'டிவி'யில், 'காமெடி' காட்சிகளைப் பார்த்தால் கோபம் தான் மிஞ்சும்; ஒளிபரப்பிய காட்சிகளையேத் தான், எல்லா தமாஷ், 'சேனல்'களிலும் திரும்பத் திரும்ப போடுகின்றனர். அவ்வப்போது சினிமா பாடல்களைக் கேட்கலாம்; நல்ல புத்தகங்களைப் படிப்பதொன்றே, கவலைகளை மறக்க சிறந்த வழி!மல்லிகா அன்பழகன், சென்னை: புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த துணை முதல்வர், ஓ.பி.எஸ்., அந்துமணியின் புத்தகங்களை அள்ளிச் சென்றதை அறிந்த போது, என்ன நினைத்தீர்கள்?நான் எழுதிய அனைத்து புத்தகங்களையும் துணை முதல்வர் காசு கொடுத்து அள்ளிச் சென்றதை அறிந்த போது, கிராமத்து வாசகர் முதல், நாட்டை வழி நடத்துபவர் வரை, என் எழுத்து சென்று அடைந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது!* சி.சரண்யா, நாவலுார்: 'தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன்...' என, ராகுல் கூறியிருப்பது, எதைக் காட்டுகிறது?அவரது கூட்டணியில் உள்ள, தி.மு.க., இதைச் செய்ய தவறிவிட்டது என்பதையே சொல்கிறது. இதற்கு, தி.மு.க.,வால் பதிலடி கொடுக்க முடியுமா?* ஆர்.ஸ்ரீதரன், சென்னை: இந்தியாவில் இருந்து கொண்டே, 'இந்தியா ஒரு நாடே கிடையாது... வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது...' என்று பிதற்றும் அரசியல்வாதிகளுக்கு, என்ன தண்டனை கொடுக்கலாம்?அவர்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்!எம்.செந்தில்குமார், சென்னை: தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர் நேர்காணல் என்ன வித்தியாசம்?இரண்டுமே, 'டுபாக்கூர்' தான்! ஏற்கனவே, இரண்டும் ரகசியமாக வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரர்கள் ஆயிரக்கணக்கில் கொடுத்தது, வாக்காளர்களுக்கு உதவும்!எம்.விக்னேஷ், மதுரை: சென்னை மற்றும் அனைத்து பதிப்புகளின் ஆசிரியராக இருந்தவரும், பின்னர், சென்னை பதிப்பின் கவுரவ ஆசிரியராகவும் இருந்த அமரர் கிருஷ்ணமூர்த்தியிடம், நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எது?வாசகர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்; அவர்களுக்கு உதவும் செய்திகளை வெளியிட வேண்டும்; எந்த கட்சியையும் சார்ந்திருக்கக் கூடாது என்பதுடன், யாருடன் கோபப்படாமை, அமைதி, புன்சிரிப்பு, நேர்மை ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். நான் கூறியது சிறிதளவே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !