அந்துமணி பதில்கள்!
நாகராஜன், சிதம்பரம்: வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்கொள்ளும் கருத்தை தவிர்த்து, பா.ஜ.,வை எதிர்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறாரே...அ.தி.மு.க., 'லெட்டர் பேட்' கட்சியாகி விட்டது... அண்ணாமலை தலைமையால், ஹிந்துக்களின் ஆதரவை பெற்று விட்டது, பா.ஜ., அதனால், பயப்படுகிறார்!ஜெ. கண்ணன், சென்னை: நீங்கள் கட்டியிருக்கும், 'வாட்சின்' விலை என்ன?'டியர்' கண்ணன்... பா.கே.ப.,வில் என் படம் பார்த்ததில்லையா... நான், கை கடிகாரமோ, கழுத்தில் சங்கிலியோ அணிவதில்லை... தமிழக பா.ஜ., தலைவர் அணிவதை அரசியலாக்க பார்க்கின்றனர், தி.மு.க.,வினர்!எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி, திண்டுக்கல்: 'விஞ்ஞானப்பூர்வமான ஊழல்' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்று ஆளுவோரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்!ஆர். ராஜேஷ், திருச்சி: என் நண்பன் ஒருவன், பலராலும் பழித்துப் பேசப்படுகிறானே... அவ்வாறு பேசப்படாமல் இருக்க விரும்பினால், எந்தவொரு பொருளையும், எவரிடமிருந்தும், களவாட நினைக்காமலும், இலவசமாக பெற விரும்பாமலும், தன் மனதை திடமாக்கிக் கொள்ள வேண்டும்!எல்.முத்துக்குமரன், திருப்பூர்: ஒரு மனிதனுக்கு அனுபவம் எப்போது வருகிறது? அறிவு எப்போது வருகிறது?கடன் கேட்கப் போகும் போது, அனுபவம் வருகிறது. கடன் கொடுத்தவன், கடனைக் கேட்கும் போது, அறிவு வருகிறது.வி. ரவிசங்கர், தேனி: திரைப்பட துறையில், புதுப்புது இளம் நடிகையரின் வரவு அதிகரித்துள்ளதே...முற்றிய வெண்டைக்காய்களை விட்டு விட்டு, பிஞ்சு காய்களாக பார்த்து வாங்குவது, ரொம்ப காலமாக இருந்து வருகிற பழக்கம் தானே!ஆர். ஜெயபால், விருதுநகர்: ஒரு அரசியல்வாதி, தேர்தலில் தோற்க, காரணம் என்னவாக இருக்கும்?மக்கள், அவரை புரிந்து கொண்டனர் என்று அர்த்தம்!* வி. ஜானகி, காட்டுமன்னார்கோவில்: வாழ்க்கை என்பது நாடகமா?உண்மை தான். வாழ்க்கை என்பது, சாதாரண நாடகம் அல்ல, 'ஓசி' நாடகம். நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதையெல்லாம், நம்மை சுற்றியிருப்பவர்கள், டிக்கெட் வாங்காமலே வந்து பார்த்து ரசிக்கின்றனரே!