சென்ட் தயாரிப்பது குடிசை தொழில்!
'சென்ட்' தயாரிப்பில், ஆப்ரிக்க நாடான எகிப்து தான், முன்னணியில் இருக்கிறது. ஆனால், பல நுாற்றாண்டுக்கு முன்பே, வாசனை திரவியங்களை இந்தியாவில் தயாரித்து வந்துள்ளனர். இன்றும், உ.பி., மாநிலத்தில் உள்ள, கன்யாகுப்ஜம் என்ற கனுாஜ் கிராமம் தான், 'சென்ட்' தயாரிப்பில், பல்லாண்டு பாரம்பரியம் மிக்க இடம். இங்கு, ஏராளமான வீடுகளில், இயந்திர உதவியின்றி, குடிசை தொழிலாக, 'சென்ட்' தயாரிக்கப் படுகிறது.— ஜோல்னாபையன்.