சமூக சேவையில் சித்ரா!
கடந்த, 30 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருக்கும், பாடகி சித்ராவின், ஐம்பதாவது, பிறந்த நாளை, மேடை போட்டு, விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று, அவருடைய ரசிகர்கள் விரும்பிய போது, அதற்கு மறுத்து விட்டார் சித்ரா. தன், ஒரே மகள் நந்தனா மறைந்ததில் இருந்து, ஆடம்பர விழாக்களை விரும்பாத சித்ரா, ஒரு டிரஸ்ட் நிறுவி, 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதன் மூலம், ஏழை எளியவர்களுக்கு, உதவ முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, 'ஏழைகளின் துயர் துடைப்பது தான் என்னுடைய வருங்கால லட்சியம்...' என்கிறார் சித்ரா.-ஜோல்னா பையன்.