உள்ளூர் செய்திகள்

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்!

கம்ப்யூட்டர் உலகில் இருப்பவர்களுக்கு, கூகுள் இணையதளம் பற்றி தெரியாமல் இருக்காது. அத்துடன், ஏற்கனவே உள்ள இணையதளங்களுக்கிடையே கடும் போட்டிகள் இருப்பதும் சகஜம். இது, தற்போது அதன் அலுவலக கட்டடங்களின் வடிவமைப்பிலும் எழத் துவங்கியுள்ளது.ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய மத்திய அலுவலகங்களின் கட்டடத்தை, வட்டமாக அமைத்துள்ளது. இதை விண்ணிலிருந்து பார்க்கும் போது, 'விண் கப்பல்' போல் உள்ளது என, ஆப்பிள் முன்னாள் நிர்வாகி ஸ்டிவ் ஜாப்ஸ் கூறி பெருமைப் பட்டார்.தற்போது, கூகுள் கம்பெனி, கலிபோர்னி யாவின் மவுன்டர் வீயூவில், சிலிகான் கிராபிக்ஸ் நிறுவனத்தின் கட்டடத்தில் இயங்குகிறது. ஜூராசிக் பார்க்கில் வரும் டயனோசரை வடிவமைத் தது, இந்த சிலிகான் கிராபிக்ஸ் தான்!இதனிடையே, கூகுள், 1.1 மில்லியன் சதுர அடியில், புது கட்டடம் கட்டி வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது, சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே புதுமைகளுக்கு பஞ்சமில்லை. வளைந்து, செவ்வகமாக, முக்கோணமாக, பல பாலங்கள், சுரங்கப்பாதைகள் என கட்டி வருகிறது.ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்ல, சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது; இரண்டு நிமிடங்களுக்குள் போய் விடலாமாம். கூகுள் அலுவலகத்தில், டிபன், சாப்பாடு, டின்னர் மூன்றுமே இலவசம். டைனிங் ஹாலுக்கு செல்ல, சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. கான்ப்ரன்ஸ் ஹால்கள், முட்டை வடிவத்தில் வடிவமைத்துள்ளனர். 'பே வியூ' என்ற பெயர் கொண்ட இந்த புதிய கட்டடத்தை, 2015க்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.பேஸ் புக் நிறுவனம், தன்னுடைய ஊழியர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, அலுவலகத்தினுள், ஒரு மெயின் தெருவையே உருவாக்கப் போகிறதாம். சபாஷ்... சரியான போட்டி!— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !