உள்ளூர் செய்திகள்

அடங்க மாட்டாரோ!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகை கிம் கர்தாஷியான். பெரிய அளவில் படங்களில் நடித்ததும் இல்லை; சொல்லிக் கொள்ளும்படியான திறமையும் இல்லை. ஆனால், ஹாலிவுட் நடிகைகளை விட, அதிகமான ரசிகர் பட்டாளம் இவருக்கு உண்டு. ஏடாகூடமாக, 'போஸ்' கொடுத்து, சர்ச்சையை கிளப்புவதில் இவருக்கு அலாதி பிரியம். தற்போது, இவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இதற்கு பின்பாவது, அடக்கம், ஒடுக்கமாக இருப்பார் என நினைத்தால்... ஊகூம்.பிரபல ஆங்கில பத்திரிகைக்கு, ஹாலிவுட்டின் மறைந்த நடிகை மார்லின் மன்றோ போல், அசத்தலாக போஸ் கொடுத்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில், பெரும்பாலான புகைப்படங்களில், மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார். மற்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவரின் கணவர், 'அட்டகாசமான புகைப்படம். சூப்பர்...' என, பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !