உள்ளூர் செய்திகள்

கப் அண்டு சாசர் கிணறு!

இவ்வளவு பெரிய, 'கப்- அண்டு சாசர்' எதற்கு என்கிறீர்களா? இது ஒரு கிணறு! கிணற்றை தான் இப்படி கலை நயத்துடன் உருவாக்கி இருக்கிறார், அஜயன் என்ற வாலிபர். கேரள மாநிலம் ஆலப்புழா கருவாற்றா கிராமத்தில் வசிக்கும் இவர், கட்டட கூலி வேலை செய்து வருகிறார். முறைப்படி கற்காமலேயே இவர், சிறந்த கலைஞராக இருக்கிறார். ஒரு வீட்டில் வேலை செய்த போது, 'கிணறு வித்தியாசமான வடிவில் இருக்க வேண்டும்...' எனக் கேட்டார், வீட்டின் உரிமையாளர். அப்போது தான், 'கப்- அண்டு சாசர்' கிணற்றை அமைத்து அசத்தி இருக்கிறார், அஜயன். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !