வித்தியாசமான பூ விற்பனையாளர்கள்!
படத்தில் காணப்படும் இவர், எந்த மாறுவேட போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை; பூ வியாபாரி தான், இவர்.ஆசியாவில் மிகப்பெரிய பூ விற்பனை செய்யும் சந்தை, மேற்கு வங்க மாநில தலைநகர், கோல்கட்டாவில் இருக்கிறது. ஹவுரா பாலத்தின் கீழ், மிக நீளமான தெருக்கள் முழுவதும் பூக்கள் விற்பனை கடைகள் தான் உள்ளன. தெருத் தெருவாக சென்றும் பூக்களை விற்பர்.உடல் முழுவதும் மலர் மாலைகளை தொங்கவிட்டபடி, சாலைகளில் சுற்றி வந்து, பூக்களை விற்பனை செய்வர், இந்த பூ விற்பனையாளர்கள். — ஜோல்னாபையன்