உள்ளூர் செய்திகள்

ரத்த தானத்தை வலியுறுத்தி வித்தியாசமான ஊர்வலம்!

லண்டனில், வரும் ஜூலையில் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. போட்டி துவங்கி விட்டால், ஒட்டு மொத்த பிரிட்டன் மக்களின் கவனமும், அதில் சென்று விடும் என்பதால், பிரிட்டன் சுகாதார மையம், இப்போதே எச்சரிக்கை மணி அடித்துள்ளது. 'அந்த நேரத்தில், அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு, ரத்த தானம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அப்போது வழக்கத்தை விட, 30 சதவீதம் அதிகம் ரத்தத்தை இருப்பு வைக்க வேண்டும். அதற்கு இப்போதே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...' என, சுகாதார மையம் கூறியது.இந்த எச்சரிக்கை, லண்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் காதுகளை எட்டி விட்டது போலும். உடனடியாக களத்தில் இறங்கினர். எட்டு பேர் கொண்ட ஒரு குழு, உள்ளாடைகளை மட்டும் அணிந்து, தங்கள் உடலில் வித்தியாசமான ஓவியத்தை வரைந்தனர். ரத்த நாளங்கள் மற்றும் இதயம் ஆகியவை, வெளியில் தெரிவது போன்ற ஓவியத்தை, தங்கள் உடலில் வரைந்து, தெற்கு லண்டனில், மிகவும் பிசியாக இருக்கும் தெருக்களில், ரத்த தானத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பார்த்து விட்டு, ஏராளமானோர் ரத்த தானம் செய்ய முன் வந்துள்ளனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !