உள்ளூர் செய்திகள்

கஷ்டமான உலக சாதனை!

இரண்டு கைகளை இணைத்து கட்டி, கூடுதலாக, கால்களில் இரும்பு சங்கிலியால் பிணைத்தபடி நீந்த வேண்டும்; உங்களால் முடியுமா?ஐரோப்பா கண்டத்தில் உள்ள, பல்கேரியா நாட்டை சேர்ந்த, 64 வயதான பெட்கோவ் என்ற நீச்சல் வீரர், கை, கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து கட்டி, 3,380 மீட்டர் துாரம் நீந்தி, அசத்தியுள்ளார். இது, புதிய உலக கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதற்குமுன், 2013ல், உலக சாதனை புரிந்தவர், கோபால் கார்வி என்ற இந்தியர். இவர், உடுப்பியை ஒட்டிய கடலில் செயின்ட் மேரி தீவு மற்றும் மெய்பி என்ற இடத்திற்கு அருகே, 3,071 மீட்டர் துாரம் நீந்தி, உலக சாதனை செய்தார். இதற்காக, அப்போதே அவருக்கு, 12 லட்சம் ரூபாய் செலவானதாம்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !