பிஷிங் ல்யூர் என்றால் என்ன தெரியுமா?
துாண்டிலில் மீன் பிடிக்கும்போது, சிறிய மீன்களை கொக்கியில் மாட்டி, தண்ணீரில் போடுவர், அதை தின்ன வரும் மீன்கள், கொக்கியில் சிக்கியதும் பிடிப்பர். சிறிய மீன்களுக்கு பதிலாக, துாண்டிலில் போடும் செயற்கை மீன்களுக்கு தான், பிஷிங் ல்யூர் என்று ஆங்கிலப் பெயர். இது, உயிருள்ள மீன் போல் அசையும்போது, பெரிய மீன்கள் ஏமாந்து இதை விழுங்க வந்து, துாண்டிலில் சிக்கிக் கொள்ளும். செயற்கை மீன் மட்டுமல்லாமல், புழு மற்றும் தவளை போன்ற உருவங்களும் உள்ளன. இதன் விலை, 25லிருந்து 700 ரூபாய் வரை. சீனா மற்றும் கொரிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது.— ஜோல்னாபையன்.