தெரியுமா?
சுதந்திர போராட்டத்தின், பல்வேறு கால கட்டங்களில், தமிழகம் முதன்மையாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட சில சந்தர்ப்பங்கள், இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் பங்குபெற்றவர்கள் யார் என்று உங்களால் கூற முடியுமா பாருங்கள்...1. காந்திஜிக்கு, தமிழ் சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா?2.ஆங்கிலேய கலெக்டரை சுட்டுக்கொன்ற, ஒரு வீர வாலிபன், தமிழகத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் என்ன... சம்பவம் நடந்தது எங்கே?3.அகிம்சா முறையில், உலகப் புகழ்பெற நடத்திய, சத்தியாகிரக போராட்டத்தை காந்திஜி, தமிழகத்தில் தான் முதன் முதலில் தீர்மானித்தார்... அது எந்த இடத்தில், யார் வீட்டில் என்று தெரியுமா?4.முதல் சிப்பாய் கலகம் நடத்தது எப்போது... எங்கு?5.காங்கிரசில், முதல் தீர்மானத்தை வௌியிட்டவர் யார்?6.முதல் தேசிய பத்திரிகையை நடத்தியவர் யார்?7.காந்தி ஆசிரமத்தை முதலில் ஏற்படுத்தியவர் யார்?8.தொழிலாளர்களை தேசிய போரில் முதலில் ஈடுபடுத்தியவர் யார்?9.கதர் பிரசாரத்தை முதலில் ஆரம்பித்து நடத்தியவர் யார் என்று தெரியுமா?10.ஹரிஜன தொண்டில் முதலில் ஈடுபட்டவரின் பெயர் என்ன?11.கள்ளுக் கடைகளின் முன், முதன் முதலில் மறியல் செய்தவர்கள் யார்?12.வரி கொடா இயக்கத்தில், தன் நிலத்தை முதலில் இழந்தவர் யார்?13.நாட்டின் விடுதலைக்காக, துாக்கு மேடையில் முதலில் மாண்டவர் யார்?14.காங்கிரஸ் மகாசபைக்கு தலைமை வகித்த, முதல் தமிழர் யார்?15.தமிழகத்தில் சிறை சென்ற, முதல் பெண்மணி யார்?16.தமிழகத்தில், முதலில் மதுவிலக்கு அமல் செய்யப்பட்ட மாவட்டம் எது?17.உண்மை செய்திகளை வெளியிட, 'சுதேசி' செய்தி ஸ்தாபனத்தை முதலில் ஏற்படுத்தியவர் யார்?18.நாடக மேடை மூலம், முதன் முதலில் தேச பக்தியை பரப்பியவர் யார்?19.ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, முதலில் சிறை சென்றவரும், காந்தீயத்தை தமிழகத்தில் பரப்ப வழிகாட்டியாக இருந்தவருமான முதல்வர் யார்?20.கடல் கடந்த நாடுகளில், காந்திஜி நடத்திய அறப்போரில் பங்கேற்ற, தமிழக பெண்மணி யார்?விடை 1.தில்லையாடியை சேர்ந்த கன்னியப்ப செட்டியார்.2.வாஞ்சிநாதன், மணியாச்சி ரயில் சந்திப்பில்.3.சென்னையிலிருந்து, சீனிவாச ஐயங்கார் இல்லத்தில்.4.1808ல், வேலுார் கோட்டை.5.ஜி.சுப்பிரமணியய்யர்.6.மண்டயம் சகோதரர்கள். ஆசிரியர் பொறுப்பு - கவி பாரதியார்.7.ப.ஜீவானந்தம், சிறுவயல் என்ற கிராமத்தில், 1920ல் ஏற்படுத்தினார்.8.திரு.வி.கல்யாணசுந்தரனார்.9.ஈ.வெ.ரா.,10.மதுரை வைத்தியநாதய்யர்.11.ஈ.வெ.ரா.,வின் முதல் மனைவி நாகம்மையும், சகோதரி கண்ணம்மாவும்.12.விவேக சிந்தாமணி ஆசிரியர், சி.வி.சுவாமிநாதய்யர், 1928ல் வரி கொடுக்க மறுத்ததால், திருவையாறில் உள்ள இவரது நிலங்கள் ஏலம் விடப்பட்டன.13.வீரபாண்டிய கட்டபொம்மன்.14.சேலம் விஜயராகவாச்சாரியார்.15.டாக்டர் ருக்மணி லட்சுமிபதி.16.சேலம் மாவட்டம்.17.சதானந்த்.18.பாவலர், தெ.பொ.கிருஷ்ண சுவாமி.19.ராஜாஜி.20.தில்லையாடி வள்ளியம்மை.