இதப்படிங்க முதல்ல...
டோனி- ஷேவாக்காக சிவா- சந்தானம்!சிவா, சந்தானம் நடித்துள்ள, யாயா படம், கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிவாவைக் கேட்டால், 'சகுனி படத்தில், ரஜினி - கமலாக, கார்த்தியும், சந்தானமும் நடித்தது போல், இப்படத்தில், 'டோனி - சேவாக்' என்ற பெயர்களில், நானும், சந்தானமும் நடித்துள்ளோம். எங்கள் கேரக்டரின் பெயர் தான், அப்படி. ஆனால், கிரிக்கெட் விளையாட்டுக்கும், யாயா படத்தின் கதைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை...' என்கிறார் சிவா. — சினிமா பொன்னையாவருத்தத்தில் கவுண்டமணி!ரீ என்ட்ரியாக, வாய்மை உட்பட, சில படங்களில் நடித்து வருகிறார் கவுண்டமணி. ஆனால், ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வரும் அர்ஜூன், முதல் பாகத்தில் நடித்த காமெடியன் செந்திலை மட்டும் சேர்த்துக் கொண்டு, கவுண்டமணியை தவிர்த்து விட்டார். அவர் நடித்த வேடத்துக்கு, பிரம்மானந்தம் என்ற தெலுங்கு காமெடியனை, ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த சேதியறிந்த கவுண்டமணி, 'முதல் பாகத்தில் இனித்த என் நடிப்பு, இப்போது, அர்ஜுனுக்கு கசக்கிறது போலும்...' என்று, தன் வருத்தத்தை, தன் பாணியிலேயே, கிண்டலாக கூறியுள்ளார்.— சி.பொ.,கதை சொல்லத் தெரியாத சுந்தர்.சி.,டைரக்டர் சுந்தர்.சி.,க்கு, ஹீரோக்களிடம் அமர்ந்து, முழுக்கதையையும் சுவாரஸ்யமாக சொல்லத் தெரியாது. இதை, வெளிப்படையாக சொல்லும் அவர், 'அதன் காரணமாகவே, முழுக் கதையையும் கேட்ட பிறகே, படங்களை ஒத்துக் கொண்டு நடிக்கும் விஜய் உள்ளிட்ட, சில மேல்தட்டு ஹீரோக்களை, என்னால் அணுக முடியவில்லை...' என்கிறார் சுந்தர்.சி., இருப்பினும், ஒன் லைனை மட்டுமே கேட்டு, சுந்தர்.சி.,யின் அடுத்த படத்தில் நடிக்க, ஒத்துக் கொண்டுள்ளார் அஜீத். — சி.பொ.,டூ-பீஸ் நடிகையாகும் ப்ரியா ஆனந்த்!எதிர்நீச்சல் படத்தை போன்று, வணக்கம் சென்னை படமும், தன்னை பேச வைக்கும் என்று, நினைக்கும் ப்ரியா ஆனந்த், அடுத்தபடியாக, மேல்தட்டு ஹீரோக்களுடன் இணைய முண்டியடித்து வருகிறார். அதனால், தனுஷ், ஆர்யா, விஷால் மாதிரியான ஹீரோக்களுக்கு தூது விட்டு வரும் ப்ரியா, டூ-பீஸ் நாயகியாக உருவெடுக்கவும் தயார் என்றும் கூறிவருகிறார். காலம் செய்வதை, கோலம் செய்யாது! — எலீசாகாஜலுக்கு சந்தோஷம் கொடுத்த 28!சமீபத்தில், தன் 28வது பிறந்த நாளை கொண்டாடிய காஜல் அகர்வால், மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். காரணம், 'இந்த ஆண்டின் துவக்கமே என் சினிமா மார்க்கெட், அமோகமாக உள்ளது. குறிப்பாக விஜய், கார்த்தி என்று, தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்திருப்பது போல், தெலுங்கு, இந்தியிலும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்துள்ளன. அதனால், இந்த 28 வயது, என் வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமானதாக அமையப்போகிறது...' என்கிறார். எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்!— எலீசாமரியான் பார்வதி க்ரீன் சிக்னல்!பூ படத்தைத் தொடர்ந்து, மரியான் படத்தில் நடித்துள்ள நடிகை பார்வதியின், முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வர, அவரை சக்கையாக பிழிந்துள்ளார் இயக்குனர் பரத்பாலா. அதனால், 'இனி என்னால் எந்த மாதிரியான சவாலான கதைகளிலும் நடிக்க முடியும்...' என்று சொல்லும் பார்வதி, கதையுடன் கூடிய முத்தக்காட்சிகளில் நடிக்கவும், 'கிரீன் சிக்னல்' கொடுத்து வருகிறார். இதனால், கமர்ஷியல் படாதிபதிகளின் கவனம், பார்வதி பக்கம் திரும்பியுள்ளது. ஆற்றுதே, என்னை தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே! —எலீசாவிஷால் இயக்கும் ஹாலிவுட் ரேஞ்ச் படம்!அர்ஜூன் இயக்கி நடித்த, ஏழுமலை படத்தில், அவரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் விஷால். ஆனால், எதிர்பாராத விதமாய் நடிகராகி விட்டார். இருப்பினும், எதிர்காலத்தில், தானும் அர்ஜூன் பாணியில், படம் இயக்கி நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அடுத்த ஆண்டே கூட, அது நடைமுறைக்கு வரலாம் என்று சொல்லும் விஷால், 'அப்படி, நான் படம் இயக்கினால், அது ஹாலிவுட்டுக்கு நிகரான படமாக இருக்கும்...' என்கிறார். — சினிமா பொன்னையாஅவ்ளோதான்!