உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் மருதநாயகம்!தன் கனவு படமான, மருதநாயகம் படத்தை 1997லேயே, இங்கிலாந்து ராணியை, சென்னைக்கு அழைத்து வந்து, பரபரப்பாக துவங்கினார் கமல். ஆனால், வேகமாக வளர்ந்த அப்படம், பின், பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது. அப்படத்தை, பதினேழு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தூசு தட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல். தற்போது, விஸ்வரூபம் படத்திற்கு பின், கமலின் வியாபார வட்டம், உலக அளவில், பரந்து விரிந்து கிடப்பதால், ஒரு பிரபல நிறுவனம், கமலின் குரலுக்கு, செவி சாய்த்துள்ளது. அதனால், விஸ்வரூபம்-2 படத்திற்கு பின், மருதநாயகத்தை, மீணடும், கமல் துவக்குவார் என்று கூறப்படுகிறது.— சினிமா பொன்னையாகரகாட்டக்காரி ஸ்ரேயா!நடிகை ஸ்ரேயாவுக்கு, பரத நாட்டியம், குச்சிப்புடி என, பலவகை நடனங்கள் அத்துபடி. அதன் காரணமாக, கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ரேயாவை, தான் இயக்கும் படத்தில், 'புக்' செய்துள்ளார் பாலா. இதனால், தமிழ் சினிமாவில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா போன்று, இரண்டாவது இன்னிங்சை அமோகமாக துவக்கியுள்ளார். மேலும், கரகாட்டக்காரனில் நடித்த கனகாவை மிஞ்சும் வகையில், கரகாட்டத்தை நேர்த்தியாக ஆடி, அவார்டுகளை குவித்து விட வேண்டும் என்று, கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், இப்படத்தில் நடிக்க, நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமியும், கடும் போட்டியில் குதித்துள்ளார். இதனால், வரலட்சுமியையும், இன்னொரு வேடத்தில் நடிக்க வைக்கும் பரிசீலனையில் உள்ளார் பாலா. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்!— எலீசாஅனுஷ்கா கவர்ச்சிக்கு தடா!அருந்ததி படத்தில், ஆவேச நடிப்பை வெளிப்படுத்திய போதும், அதன் பின், அனுஷ்காவை தோலுரிக்க, ஆந்திரவாலாக்கள் தயங்கவில்லை. பிகினி, டூ பீஸ் களத்திலும் இறக்கி விட்டனர். ஆனால், தற்போது, ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, இனிமேல், இந்த, 'இமேஜை' பாதுகாக்கப் போவதாக கூறுகிறார். அதனால், அடுத்த ஆண்டில் நடிப்பதற்காக, சில கமர்ஷியல் டைரக்டர்கள் சொன்ன கதையைக் கேட்ட அனுஷ்கா, தன், 'இமேஜை' கூறு போடும் கதைகளாக இருந்ததால், தடாலடியாக மறுத்துவிட்டார். மேலும், சில கிளாமர் காட்சிகளை குறிப்பிட்டு, 'இந்த காட்சிகளுக்கு, இப்போதே கத்திரி வைத்தால், நடிப்பது பற்றி, மறுபரிசீலனை செய்கிறேன்...' என்று, தன் கண்டிஷனையும் சொல்லி அனுப்பியுள்ளார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்!— எலீசாபிரியதர்ஷனுக்கு ஷாக் கொடுத்த லிசி!தமிழில், கோபுரவாசலிலே, சிறைச்சாலை மற்றும் சிநேகிதியே உட்பட, பல படங்களை இயக்கியவர், பிரியதர்ஷன். இவரும், கமலுடன், விக்ரம் படத்தில் நடித்த லிசியும், கடந்த, ௧௯௯௦ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த, சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். அதையடுத்து, விவகாரத்து கேட்கும் லிசி, ஜீவனாம்சமாக, ௮௦ கோடி ரூபாய் கேட்டுள்ளார். இதனால், ஆடிப்போன பிரியதர்ஷன், 'தனக்கு, விவாகரத்து செய்வதில் விருப்பம் இல்லை...' என்று சொல்லி, லிசியுடன் மீண்டும் இணைய, குடும்பத்தார் மூலம், சுமூகமான பேச்சவார்த்தையை முடுக்கி விட்டுள்ளார். ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கி திரிசமம் செய்யாதே!— எலீசாவிஷாலுக்கு புதிய வியாதி!நான் சிகப்பு மனிதன் படத்தில், 'நார்கோலெப்சி' என்றொரு வியாதியால், பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விஷால். இந்த வியாதி இருப்பவர்கள், திடீர் திடீரென்று தூங்கி விடுவராம். அதனால், ரொமான்ஸ் மற்றும் சண்டை காட்சிகளின் போது, தூங்கி விடுவது போன்றும், அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு விஷயங்களை, இதுவரை, தமிழ் சினிமாவில் யாருமே சொல்லாத வகையில், புதுமையாக படமாக்குகின்றனர். அதனால், 'இப்படம் என் கேரியரில் ரொம்ப புதுசாக இருக்கும்...' என்று சொல்லும் விஷால், சண்டை காட்சிகளை படமாக்க, ஹாலிவுட் கேமராமேன் மற்றும் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களையும் வரவழைத்துள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* ஜெயமான ஹீரோ, இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படத்தில் நடித்துள்ள, 'பால்' நடிகை, அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அவருடன் ஓருயிரும், ஈருடலுமாய் கலந்து விட்டார். நடிகர், தன் அடுத்தடுத்த படங்களில், தனக்கு சிபாரிசு செய்வார் என்ற நம்பிக்கையில்தான் தாராளம் காட்டினார் நடிகை. ஆனால், நடிகரோ, தன் புதிய படத்தில், 'தாரா' நடிகைக்கு, சிபாரிசு செய்து விட்டார். இதனால், கடுப்பான, 'பால்' நடிகை, ஜெயம் நடிகருக்கு சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார். * 'பப்ளிமாஸ்' நடிகை மீதான காதலை, முறித்துக் கொண்ட விரல் வித்தை நடிகர், மாஜி காதலியான, 'தாரா'வுடன் மறுபடியும், 'நட்பு' என்ற பெயரில், காதலை வளர்த்து வருகிறார். அதன் காரணமாக, மதிய இடைவெளி நேரங்களில், அம்மணியுடன் கேரவனுக்குள் கொஞ்சி விளையாடத் துவங்கியிருக்கும் நடிகர், சில நாட்களில், நடிகையை தன் காரிலயே வீடு வரை கொண்டு விடுகிறார். அதைப்பார்த்து, இத்தனை நாளும் 'தாரா'வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, அந்த பிக்கப் நடிகர், 'அப்-செட்' ஆகி கிடக்கிறார்.* பூலோகம் படத்தில், பாக்சராக நடித்துள்ள ஜெயம்ரவி, அண்ணன் ஜெயம்ராஜா இயக்கி வரும் படத்தில், கராத்தே வீரராக நடிக்கிறார்.* ரஜினிகாந்த் - லதா தம்பதியர், சமீபத்தில் தங்களது, 33வது திருமண நாளை, விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.* சிம்பு-ஹன்சிகா நடித்து வரும், வாலு படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடக்கிறது.* கார்த்திக் மகன் கவுதமுடன் நடித்துள்ள லட்சுமிமேனன், ப்ரியா ஆனந்த், ராகுல் ப்ரீத் சிங் ஆகிய மூன்று நடிகைகளுமே, அவருக்கு நெருக்கமான தோழிகளாகி விட்டனர்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !