இதப்படிங்க முதல்ல...
ஷங்கரின் பிரமாண்ட திட்டம்!எந்திரன் - 2 படத்திற்கான அனிமேஷன் ஒத்திகை வேலைகளுக்காக, அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் ஷங்கர். எந்திரன் படத்தை விடவும், இப்படத்தை பிரமாண்டமான படமாக்க திட்டமிட்டிருக்கும் அவர், ஹாலிவுட்டின் பிரபல சினிமா டெக்னிஷியன்களை, இப்படத்தில் இணைத்திருப்பதோடு, 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படத்தை விட, அதிக பட்ஜெட்டில் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில், அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்கிற பட்டியலில் இடம் பிடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாசமந்தாவுக்கு நடிப்பு, 'டிப்ஸ்' கொடுத்த மீனா!கத்தி படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய்யின், 59வது படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கிறார் சமந்தா. இப்படத்தில், முந்தைய படத்தை விட, ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதுடன், இவர்களின் மூன்று வயது மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார். அதனால், மகளுடன் ஸ்பாட்டுக்கு செல்லும் மீனா, சில காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று சமந்தாவுக்கு, 'டிப்ஸ்' வழங்குகிறார்.— எலீசாரூபா நடராஜின் அரை நிர்வாண படம்!கன்னடத்தில் ரூபா நடராஜ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம், மிஸ் மல்லிகே! பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், அரை நிர்வாண காட்சிகளில் நடித்து கலக்கியிருந்தார் ரூபா நடராஜ். அந்த பரபரப்பிற்காகவே, அப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், அப்படத்தை, தற்போது, தமிழில், 'டப்' செய்து வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன. பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!— எலீசாவிஜய் மன்றங்களின் நலத்திட்ட உதவிகள்!தன் ரசிகர் மன்றங்களுக்கு, அரசியல் சாயம் பூசி விடக் கூடாது என்பதற்காக, 'இப்போதைக்கு அரசியல் கட்சிகளுடன் நட்பு வளர்க்க வேண்டாம்...' என்று மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார் விஜய். அதேசமயம், 'எதிர்காலத்தில் அரசியல் களத்தில் இறங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட வேண்டும்...' என்று சொல்லி, 'அரசியல்வாதிகளுக்கும் மேலான நற்பணிகளை மன்ற நிர்வாகிகள் இப்போதே துவங்க வேண்டும்...' என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர் மன்றத்தினர், முன்பை விட நலத்திட்ட உதவிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!இளவட்ட இசையமைப்பாளர் நடித்த, 'பிட்' படத்தில், 'பிட்' துணி அணிந்து நடித்த யாதவ நடிகையை, தற்போது, தேடிச் செல்வதெல்லாம் ஆபாச கதைகள் தான். அதனால், வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்ட நடிகை, அதில், இரு படங்களை தேர்வு செய்துள்ளார். அதேசமயம், 'ஆடை குறைப்புக்கேற்ப என் சம்பளமும் உயரும்...' என்று கூறி, பல லட்சங்களை அதிகப் படுத்தியுள்ளார்.அந்நியன் மற்றும் ஐ போன்ற மெகா படங்களில் நடித்த சீயான் நடிகர், கடைசியாக நடித்த படம், 'ப்ளாப்' ஆகி விட்டதால், அவரது அடுத்த படம் தயாராவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைனான்ஸ் தர யாரும் முன்வராததால், நடிகரே, தன் கைவசமிருந்து பல கோடிகளை இறக்கி, அப்படத்தை துவங்கியிருப்பதாக கூறுகின்றனர்.சினி துளிகள்!* ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார் நடிகை ஸ்ரேயா.* எந்திரன் - 2 படத்தில், வில்லனாக நடிக்க, விக்ரம் முன்வந்த போதும், அதை நிராகரித்து விட்டார் இயக்குனர் ஷங்கர்.* த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பின், முன்னணி கதாநாயகன்களுடன் நடிக்க, தீவிரம் காட்டி வருகிறார் மனிஷா யாதவ்.அவ்ளோதான்!