உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கனவு நனவாகிறது!கடந்த, 1997ல் கமல் இயக்கி நடிக்கயிருந்த படம், மருதநாயகம். இப்படத்தின் பூஜை, சென்னை ஏவி.எம்., ஸ்டுடியோவில் நடைபெற்ற போது, இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆனால், அப்படம் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில், பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, மீண்டும் அப்படம் துவங்கயிருப்பதாக கமல் தரப்பு கூறுகிறது. மருதநாயகம் படத்தை, கமலின் லண்டன் நண்பர் ஒருவர் தயாரிக்க முன்வந்துள்ளார். ஆக, பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கமலின், மருதநாயகம் கனவு, நனவாகப் போகிறது.— சினிமா பொன்னையாபரபரப்புக்கு தயாராகும் மது ஷாலினி!பாலாவின், அவன் இவன் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த மது ஷாலினிக்கு, அதன்பின், தமிழில் படமே இல்லை. இந்நிலையில், கமலின் தூங்காவனம் படத்தில், ஒரு கதாபாத்திரத்தில், கமலுடன் முத்தக் காட்சியில் நடித்தவர், தற்போது, கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். இதன் காரணமாக, சில கமர்ஷியல் இயக்குனர்கள், மது ஷாலினியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்படங்களில், கிளாமர் மற்றும் முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தப் போவதாக கூறுகிறார், மது ஷாலினி. அடுத்தடுத்து முயன்றாலும், ஆகும் நாள்தான் ஆகும்!—எலீசாமெச்சூரிட்டி வேடம் தேடும் ராகுல் ப்ரீத் சிங்!ஸ்ருதிஹாசன் மற்றும் சமந்தா உள்ளிட்ட சில நடிகையர், நடிக்க வந்து பல ஆண்டுகளுக்கு பின் தான், மெச்சூரிட்டி வேடங்களில் நடிக்க விரும்பினர். ஆனால், புத்தகம் மற்றும் என்னமோ ஏதோ உட்பட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங் அடுத்தபடியாக, மெச்சூரிட்டியான வேடங்களில் நடிக்க விரும்புகிறார். ஆனால், தன்னை கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்துவர் என்பதால், தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் நாகார்ஜுனா போன்ற நடிகர்கள் நடிக்கும் நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். ஆய உபாயம் அறிந்தவள், அரிது அல்ல வெல்வது!— எலீசா.விஜய் படத்தில் சாகச ஸ்டன்ட் நடிகர்கள்!தெறி படத்தில் மூன்று வித கெட்டப்புகளில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில், போலீஸ் வேடத்தில் நடிப்பதால், சண்டை காட்சிகளில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்துக்கான ஓப்பனிங் சண்டை காட்சியை, கோவா லொகேஷனில் படமாக்கியவர்கள், தற்போது, இறுதி சண்டை காட்சியை, சென்னையில் படமாக்குகின்றனர். இந்த இரண்டு சண்டை காட்சிகளுக்காகவும், ஹாலிவுட்டில் இருந்து, சாகசங்களை செய்யக் கூடிய, ஸ்டன்ட் நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.— சி.பொ.,போட்டா போட்டியில் ஷங்கர் - ராஜமவுலி!எந்திரன் படத்தை இயக்கிய பின், இந்திய அளவில், அதிக பட்ஜெட்டில் படம் இயக்குபவர் என்கிற பட்டியலில் இருந்த ஷங்கரை, அதைவிட மெகா பட்ஜெட்டில், பாகுபலி படத்தை இயக்கி, முதலிடத்தை பிடித்தார் ராஜமவுலி. விளைவு, இப்போது, ரஜினியை வைத்து தான் இயக்கும், எந்திரன் - 2 படத்தை, பாகுபலி படத்தை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார் ஷங்கர். இந்நிலையில், பாகுபலி - ௨ படப்பிடிப்பை துவங்கியிருக்கும் ராஜமவுலி, முந்தைய படத்தை விட, பிரமாண்டமாக படமாக்க, 'செட்' அமைத்து வருகிறார். மேலும், இந்த இரு படங்களுக்கான, விளம்பரத்தை இணையதளங்களில் இப்போதே போட்டி போட்டு, 'ட்ரண்ட்' செய்தும் வருகின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!முருங்கைக்காய் டைரக்டரின் படத்தில் அறிமுகமான நான்கெழுத்து நடிகைக்கு, அவர் படம் மட்டுமின்றி, அதன்பின் நடித்த படங்களும் கைகொடுக்கவில்லை. இதனால், இதுவரை கவர்ச்சி கதவுகளை இறுக மூடி வைத்திருந்த நடிகை, தற்போது, காதல் நடிகருடன் நடிக்கும் படத்தில், கட்டவிழ்ந்து நிற்கிறார். மேலும், முன்னணி கதாநாயகர்களின் படங்கள் கிடைத்தால், ஆபாச களத்தில் குதிக்கவும் தயாராகி விட்டார்.மங்காத்தா இயக்குனர், அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்ததால், அவரது இயக்கத்தில் நடிக்க, முன்னணி நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால், புதுசுகளை வைத்து ஒரு படமெடுத்து வருபவர். கமர்ஷியல் வேல்யூ கருதி, தன் அபிமான நடிகர்கள் சிலரை, கெஸ்ட் ரோலில் நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது அழைப்பை, அவர்கள் நிராகரித்து விட்டனர். இதனால், செம மூடு அவுட்டில் இருக்கிறார், மங்காத்தா இயக்குனர்.பால் நடிகை, மீண்டும் நடிக்க வந்ததால், புகுந்த வீட்டில் டார்ச்சர் அதிகரித்துள்ளது. இதனால், தற்போது, ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நடிகை, அடுத்தபடியாக நடிக்க, சில இயக்குனர்கள் அழைத்த போது, தற்காலிகமாக நடிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் இயக்குனரான கணவரிடம், தான் நடிப்பதற்கு, பச்சைக் கொடி காட்டுமாறு, நான்கு சுவருக்குள் சண்டை போட்டு வருகிறார். சினி துளிகள்!* என்னோடு விளையாடு படத்தில் நடித்து வரும் சாந்தினி, மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.* தன் நட்பு வட்டார இயக்குனர்கள் இயக்கும் படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.* சில சமயங்களில் என்ற படத்தை, பிரபுதேவாவுடன் இணைந்து தயாரித்து வருகிறார் அமலா பால்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !