இதப்படிங்க முதல்ல...
மீண்டும் பல்ராம் நாயுடுவாக கமல்!சமீபத்தில், நடிகர் சங்க வளாகத்தில், தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான பூஜை போட்டார் கமல். அதில் ஒன்று, சபாஷ் நாயுடு என்ற காமெடி படம். ஏற்கனவே, தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடு வேடத்தில் நடித்தவர், மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, 'படம் முழுக்க இக்கதாபாத்திரமே இடம் பெறுவதால், சிரிப்புக்கு, நூறு சதவீதம் கியாரண்டி...' என்றும் கூறுகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தான், சபாஷ் நாயுடு என்ற தலைப்பை வைக்குமாறு சொன்னதாக கூறும் கமல், இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராவதாகவும் கூறினார்.— சினிமா பொன்னையாஆக் ஷன் வேடத்தில் நிக்கி கல்ராணி!டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவ்வேடத்திற்காக, சில பிரபல பெண் போலீஸ் அதிகாரிகளை முன் மாதிரியாக வைத்து நடித்திருப்பதாக சொல்பவர், இப்படத்திற்காக, 15 நாட்கள் சண்டை பயிற்சி எடுத்துள்ளார். 'ஆக் ஷனுக்கு இது ஒரு சின்ன ஆரம்பம் தான்; எதிர்காலத்தில் இன்னும் அதிரடியான ஆக் ஷன் கதைகளில் நடிப்பேன்...' என்கிறார். போகாத ஊருக்கு வழியும், காரமணிக்கு களையும்!— எலீசாத்ரிஷாவுக்கு பதிலாக லட்சுமிமேனன்!நயன்தாரா மற்றும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து விட்ட விஜயசேதுபதி, அடுத்தபடியாக, றெக்கை படத்தில், த்ரிஷாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அப்படத்தில், லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். குடும்பப் பின்னணி கொண்ட அப்படத்தில், லட்சுமிமேனனுக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்பதோடு, தனக்கு லட்சுமிமேனன் தான் பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்று அவரை, 'செலக்ட்' செய்துள்ளார் விஜயசேதுபதி.- சி.பொ.,கின்னசில் இடம் பெற முயற்சி!வாகை சூடவா மற்றும் உத்தம வில்லன் என, பல படங்களுக்கு இசையமைத்தவர், ஜிப்ரான். இவர் தற்போது, சென்னை டு சிங்கப்பூர் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தின் பாடல்களை, சென்னை முதல் சிங்கப்பூர் வரை உள்ள, ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிடுகின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவே, இம்முயற்சி நடைபெற உள்ளது.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!இளவட்ட இயக்குனரை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாரா நடிகை, அவருக்கு கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருப்பவர், முக்கிய இடங்களுக்கு சென்றால், 'இம்மாதிரி உடையணிந்து தான் செல்ல வேண்டும்...' என்று, அன்பு கண்டிஷன் போடுகிறார். ஒருவேளை, தான் இல்லாமல், அவர் மட்டும் சென்றால், அவர் என்னென்ன சாப்பிட வேண்டும் என்கிற பட்டியலை கூட, அம்மணி தான் அவ்வப்போது போனில் தெரிவிக்கிறார்.சுமார் மூஞ்சி குமாரு பட நாயகனோடு நடித்த பையா நடிகை, தல நடிகருக்கு ரூட்டு போட்டார்; ஆனால், அவ்வாய்ப்பை வேறொரு இந்தி நடிகை கைப்பற்றி விட்டார். அதனால், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புக்காக சுற்றிக் கொண்டிருந்த நடிகை, இப்போது, சண்டக்கோழியின் புதிய படத்தை கைப்பற்றியுள்ளார். அத்துடன், இப்படத்துக்காக அங்காடித்தெரு நடிகையுடன் மோத வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இறுதியில், சண்டக் கோழி, பையா நடிகை பக்கம் சாய்ந்த பின்தான், அங்காடி நடிகையின் பிடி தளர்ந்தது.மெட்ராஸ் பட நடிகை, சில படங்களில் நடித்த போதும், எதிர்பார்த்தபடி, பெரிய படங்கள் எதுவும் சிக்கவில்லை. அதனால், தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் அவர், சில மேல்தட்டு இயக்குனர்களை துரத்தி வருகிறார். அத்துடன், அவர்களை சந்திக்க செல்லும்போது, தன்னைச் சுற்றி வரும் எடுபிடிகளை துரத்தியடித்து, தான் மட்டுமே தனியாக அமர்ந்து, 'டீலிங்' பேசுகிறார். சினி துளிகள்! * சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடிக்கிறார் நயன்தாரா.* சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலை மையப்படுத்தி, ஜூலியும், நாலு பேரும் என்ற படம் தயாராகிறது.* வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கயிருந்த, வடசென்னை படம், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.* தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிப்பதை குறைத்து, தமிழில் கவனத்தை செலுத்தப் போவதாக கூறுகிறார் கேத்ரின் தெரசா.* தொடரி படத்திற்காக, ஒரே நாளில், 'டப்பிங்' பேசியுள்ளார், தனுஷ்.* வில்லனாக ரீ - என்ட்ரி கொடுத்துள்ள அரவிந்த்சாமி, விரைவில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.அவ்ளோதான்!