உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!சீதக்காதி என்ற படத்தில், 80 வயது முதியவராக நடிக்கிறார், விஜயசேதுபதி. இதற்காக, மொட்டை போட்டு, மீசையை எடுத்துள்ள அவரை, இரண்டு, ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் முழுமையாக மாற்றியுள்ளனர். இதுபற்றி கூறுகையில், 'இப்படத்தில், நாடக் கலைஞர் வேடத்தில் நடிக்கிறேன்; சிவாஜிகணேசன் மற்றும் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுக்குத் தான் இவ்வேடம் பொருத்தமாக இருக்கும்; ஆனாலும், எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது...' என்கிறார்.— சினிமா பொன்னையாதயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், அதன்பின் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், மார்க்கெட்டில் பின் தங்கியிருந்தார். ஆனால், சமீபத்தில், ஜெயம்ரவியுடன் அவர் நடித்து வெளியான, டிக் டிக் டிக் படம், 'ஹிட்'டாகியதால், இப்போது, தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நாயகியாகி விட்டார். அவ்வகையில், நிவேதா பெத்துராஜை வெற்றிப்பட நாயகி, 'லிஸ்டில்' சேர்த்துள்ள கோடம்பாக்கத்தினர், அவரது சம்பளத்தையும் உயர்த்தி, புது படங்களுக்கு போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அதிர்ஷ்டம் வந்தால், தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!— எலீசாதமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், வித்யா பாலன். இவருக்கு, தமிழ் சினிமாவிலிருந்து சில வாய்ப்புகள் தேடிச் சென்றபோது, பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்தார். ஆனால், தற்போது, மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கும் இவர், அடுத்தபடியாக தமிழிலும், அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். இவர், மும்பையில் பிறந்தவர் என்றாலும், அவரது பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!— எலீசாமீண்டும், நீயா!கமல் - ஸ்ரீபிரியா நடிப்பில், 40 ஆண்டுகளுக்கு முன், இச்சாதாரி பாம்பு படமான, நீயா வெளியானது. இந்நிலையில், தற்போது, நீயா - 2 என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்திற்கும், பழைய,நீயா படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற, 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...' என்ற சூப்பர் ஹிட் பாடலை, நீயா - 2 படத்திற்காக, ரீ-மிக்ஸ் செய்கின்றனர். ஸ்ரீபிரியா நடித்த அக்கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி, நடிக்கிறார்.- சினிமா பொன்னையாகறுப்பு பூனை!தல நடிகரை போன்று பைக் ரேசில் பிரபலமாகப் போவதாகச் சொல்லி, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் ரேஸ் மைதானத்திலேயே கிடந்தார், இரண்டெழுத்து நடிகர். ஆனால், அதிலும் பெரிதாக சாதிக்க முடியாத நிலையில், சினிமாவில் இருந்த மார்க்கெட்டும் போய் விட்டதே என்று அதிர்ச்சியடைந்த நடிகர், 'இருக்கிறதை விட்டுவிட்டு, பறக்க ஆசைப்பட்டு, இருந்த வாழ்க்கையையும் தொலைத்து விட்டேனே...' என்று, இப்போது கிடைத்த சம்பளத்தில் சில படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். ''ஹலோ, யாருப்பா... ஜெய்தானே பேசுறது... நான், வெங்கட்பிரபு பேசறேன்... பார்ட்டின்னு ஒரு படம் பண்றேன். நீதான் நடிக்கணும். உடனே வாய்யா!''தன் மாமனார், அரசியலில் பிரவேசித்திருப்பதால், இனிமேல் தன்னைப் பற்றி எந்தவித கிசுகிசுக்களும் வெளியாகக்கூடாது என்று நினைக்கிறார் சுள்ளான். அதனால், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளிடம் நட்பு வளர்ப்பதை குறைத்துக் கொண்டதோடு, தொடர்ந்து ஒரே நடிகையுடன், 'டூயட்' பாடுவதையும் தவிர்க்கிறார்.''இயக்குனர் சுப்ரமணிய சிவாவா வாங்க... வாங்க... எப்படி இருக்கீங்க?''''தனுஷ் தம்பி... படம் இயக்க சான்ஸ் கிடைக்குமான்னு கேட்க வந்தேன்.''''திருடா திருடி படத்துல என்னை நடிக்க வெச்சு, 'ஹிட்' கொடுத்தீங்க. இல்லேங்கல... இப்ப, நாலஞ்சு படத்துல நடிச்சுகிட்டு இருக்கேன். நேரமே இல்ல... வேணும்ன்னா, என் ரசிகர் மன்ற தலைவரா பொறுப்பேத்துக்கங்க.'' சினி துளிகள்!* விஷால் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள, சண்டக்கோழி-2 படம், அக்டோபர், 18ல் திரைக்கு வருகிறது.* சர்கார் படத்தில், காதில் கடுக்கன் அணிந்து நடிக்கிறார், விஜய்.* கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படத்திற்கு, தோனி கபடி குழு என்று பெயர் வைத்துள்ளனர்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !