உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!அஜீத் நடித்துள்ள, விஸ்வாசம் படம், திருநெல்வேலி மண் வாசனைக் கதையில் உருவாகி இருக்கிறது. இரண்டு வேடங்களில் அஜீத் நடித்துள்ள இந்த படத்தில், துாக்குதுரை என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது, பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, துாக்கிலிடப்பட்டவர் தான் துாக்குதுரை. அந்த வேடம் தத்ரூபமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, துாக்குதுரையின் நிஜ, 'கெட்-அப்'பிற்கு ஏற்ப, பெரிய தலைமுடி மற்றும் தாடி வளர்த்ததோடு, முறுக்கு மீசை வைத்து கம்பீர தோற்றத்துக்கு, தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார்.— சினிமா பொன்னையாவிஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!'பீட்டா' அமைப்பில் அங்கம் வகித்து வரும் த்ரிஷா, காரில் செல்லும்போது, யாராவது தெரு நாய்களை துன்புறுத்தினால், அவர்களிடம் சண்டை போடுவார். அதோடு, கவனிப்பார் இல்லாமல் வீதிகளில் நாய்கள் கிடந்தால், விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுப்பார். இப்படி நாய்கள் மீது அதிகம் பிரியம் கொண்டிருப்பதால், நாயை மையப்படுத்தி, தான் இயக்கும் முதல் படத்தில், த்ரிஷாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார், நடிகர் விஷால். ஆக, முதன் முதலாக தன் நிஜ கேரக்டரை, இந்த படத்தில் பிரதிபலிக்கப் போகிறார், த்ரிஷா. காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!— எலீசாஅமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்களில், கதையின் நாயகியாகி விட்டார், அமலா பால். இதில், 'அட்வெஞ்சர் திரில்லர்' கதையில் உருவாகும், அதோ அந்த பறவை போல படத்தில் நடித்த அமலாபால், தனக்குத் தானே தமிழில், 'டப்பிங்' பேசியுள்ளார். 'ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றி பேசியதால், நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால், 'எக்ஸாம் பீவரை' போன்று எனக்கு, 'டப்பிங் பீவர்' ஏற்பட்டது போல் இருந்தது...' என்கிறார், அமலாபால். சும்மா கிடைக்குமா சோணா சலன் பாதம்!— எலீசாபுரட்சி நடிகையாகிறார், நமீதா!திருமணத்திற்கு பின், அகம்பாவம் என்ற படத்தில் நடிக்கிறார், நமீதா. இந்த படத்திற்காக உடல் எடையை, 10 கிலோ குறைத்து, 'ஸ்லிம்' ஆகியிருக்கும், நமீதா, 'அரசியல்வாதிக்கு எதிராக போராடும் பெண் போராளியாக நடிக்கிறேன். அதனால், இதுவரை கவர்ச்சி நடிகை என்று என் மீது விழுந்திருந்த, 'இமேஜ்' இந்த படத்திற்கு பின், புரட்சி நடிகையாக மாறிவிடும்...' என்கிறார். கோடி வித்தையும் கூழுக்குத் தான்!— எலீசாகல்வி விழிப்புணர்வு துாதரான, ரகுல்பிரீத் சிங்!தெலுங்கானா மாநிலத்தின், 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' என்ற திட்டத்தின் துாதராக இருக்கிறார், நடிகை ரகுல்பிரீத் சிங். 'இதன் முக்கிய நோக்கமே, பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது தான்...' என்று கூறும் நடிகை, 'ஒரு பெண்ணுக்கு கல்வியை கொடுத்தால், அந்த குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததற்கு சமம். அதனால், தெலுங்கானா மாநிலத்தில் படிப்பறிவு இல்லாத கிராம மக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையாகருப்புப்பூனை!* நடிகையின் பாலியல் புகாரில் சிக்கியுள்ள, ஆக் ஷன் கிங் நடிகர், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால், நடிகை விடுவதாக இல்லை. அதனால், சக சீனியர் நடிகர் - நடிகையரை வைத்து, நடிகையிடம் திரைக்குப் பின் சமாதான பேச்சை துவக்கினார். நடிகை, அதற்கும் அடங்கவில்லை. அதனால், இதுவரை மனிதர்களை நம்பிய நடிகர், தற்போது, கோவில்களுக்கு சென்று, இந்த பிரச்னையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, தெய்வங்களிடம் சரணடைந்துள்ளார். 'டேய் பசங்களா... பிளஸ் 2 தேர்வு நெருங்கிடுச்சு... வில் வித்தைக்காரனான அர்ஜுனன் மாதிரி, உங்க கவனம் முழுக்க படிப்புல மட்டும் தான் இருக்கணும்...' என்றார், ஆசிரியர்.* திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும், பாணா காத்தாடி நடிகை, போக்குவரத்து விதிகளில் ஒன்றின் பெயருள்ள படத்தில், கதையின் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் ஊத்திக்கொண்டது. அதனால், அவருக்கு ஏற்கனவே கதை சொல்லி இருந்தவர்கள், தெறித்து ஓடி விட்டனர். இதோடு, கதையின் நாயகி கனவு கலைந்து விடக்கூடாது என்பதற்காக, சில அபிமான தயாரிப்பாளர்களை தனக்காக பைனான்ஸ் செய்யுமாறு துரத்தி வருகிறார், நடிகை.'என் அருமை தோழியே... சமந்தா பொண்ணு மாதிரி நொய் நொய்ங்காதே... உன், 'புராஜெக்ட்'டை முடிக்க, நான் நிச்சயம் உதவி செய்றேன்... இப்ப, ஆளை விடு...' என்றாள், சுபத்ரா.சினி துளிகள்!* 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள வேம்பு கேரக்டர், என் சினிமா கேரியரில் மறக்க முடியாதது...' என்கிறார், சமந்தா.* விஷாலின், இரும்புத்திரை படத்தை அடுத்து, விஜய் ஆண்டனி நடிக்கும், கொலைகாரன் படத்தில், வில்லனாக நடிக்கிறார், அர்ஜுன்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !