வெற்றிடத்தை நிரப்புவாரா, கவுதம்மேனன்!
பிரகாஷ்ராஜுக்கு பின், தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள வில்லன் நடிகருக்கான வெற்றிடத்தை, 'ஆக் ஷன்கிங்' அர்ஜுன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படம் இயக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இயக்குனர் கவுதம்மேனனும், வில்லனாக களமிறங்கி இருக்கிறார். அதோடு, 20 கிலோ எடை குறைத்து, கட்டுமஸ்தான தோற்றத்துக்கு மாறியுள்ளவர், 'தமிழ் சினிமாவில், வில்லன் நடிகர் இல்லாத வெற்றிடத்தை நான் தான் நிரப்புவேன்...' என்று சொல்லி, மீசையை முறுக்குகிறார்.
சினிமா பொன்னையாராஷ்மிகாவிற்கு, 'மார்க்' போடும், ரசிகர்கள்!
ராஷ்மிகாவை, 'டுவிட்டரில்' 10 லட்சம் பேர், பின் தொடர்கின்றனர். ராஷ்மிகாவின் தினசரி, 'அப்டேட்'களை தெரிந்து கொள்வதை விட, பதிவிடும் புகைப்படங்களில், அவரது அழகை வர்ணிப்பது தான் பெரும்பாலானவர்களின் வேலையாக உள்ளது. அந்த வகையில், பாதம் துவங்கி, தலை வரை, தன் உடல் பாகங்களுக்கு கொடுக்கும் மதிப்பெண்களை கணக்கிட்டால், 100 மதிப்பெண்களை கடந்து விடுவதாக சொல்லும் ராஷ்மிகா, 'பிரபஞ்ச அழகியாகவே என்னை கருதுகின்றனர், என் ரசிகர்கள்...' என்று சொல்லி, சிலிர்த்துப் போகிறார். பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!—
எலீசாபிரியாமணியை வீழ்த்திய, பூர்ணா!
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும், தலைவி படத்தில், அவரது தோழியான, சசிகலா வேடத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற நடிகை, பிரியாமணி கடும் முயற்சி எடுத்தார். அதற்காக, தன், 'கெட் - அப்'பையும் மாற்றி வந்தார். ஆனால், அதே வேடத்திற்கு, இன்னொரு பக்கம் முயற்சி எடுத்த பூர்ணாவோ, சசிகலா வேடத்திற்காக நடந்த, 'ஆடிஷனில்' அவரின் சில, 'மேனரிசத்'தை பக்காவாக வெளிப்படுத்தி, அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இதனால், கடைசி சுற்றில் தோல்வியடைந்து வெளியேறி இருக்கிறார், பிரியாமணி. உருண்டு புரண்டாலும், ஒட்டுகிற மண் தான் ஒட்டும்!—
எலீசாநடிகையின் துள்ளல், 'வீடியோ'க்கள்!
துள்ளுவதோ இளமை உட்பட பல படங்களில் நடித்தவரான, ஷெரீன், பிக்பாஸ்- - 3 நிகழ்ச்சிக்கு பின், புதிய படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார். அதோடு, பெயரளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தான் நடித்த படங்களின் பாடல்களுக்கு, மீண்டும் ஆட்டம் போட்டு அதை, 'டிக் டாக்'கில் வெளியிட்டு வருகிறார். இதுதவிர, தோழிகளுடன் தன் படுக்கையறையில், குஷி மூடில், செக்சியான ஆட்டம் போடும் வீடியோக்களையும், 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார். எல்லா வித்தையும், கால் வயிற்று கஞ்சிக்கு தான்!— எலீசா
ஒரே ஆண்டில், 'சிக்சர்'அடிக்கும், சந்தானம்!
பெரும்பாலான கதாநாயகர்கள், ஆண்டிற்கு ஓரிரு படங்கள் வெளியிடுவதே பெரிய விஷயம். ஆனால், சந்தானமோ, இந்த ஆண்டில் மட்டும், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்குத்துட்டு -- 3 மற்றும் பிஸ்கோத் என, நான்கு படங்களில் நடித்து, வெளியிடுகிறார். அதோடு, ஏற்கனவே தான் நடித்து கிடப்பில் கிடக்கும், சர்வர் சுந்தரம் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், 'இந்த ஆண்டில், ஆறு படங்களையுமே வெளியிட்டு, 'சிக்சர்' அடித்துக் காட்டுவேன்...' என்று, 'தில்'லாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!
வம்பு நடிகர், குறித்த நேரத்தில், 'ஸ்பாட்'டிற்கு செல்லாமல், தயாரிப்பாளர்களுடன் வம்பு வளர்த்து வருவதால், அவரது சினிமா வாழ்க்கையே வீழ்ச்சி கண்டிருக்கிறது. இருப்பினும், 'இதெல்லாம் அவரது ஜாதக கட்டத்தில் உள்ள குழப்பம் தான்...' என்று கூறி வரும், நடிகரின் தாடிக்கார தந்தைகுலம், 'இனி, என் மகனுக்கு நல்ல காலம் தான். அதனால், எண்ணி ஒரே ஆண்டில், தல, தளபதியை விட, பிரமாண்ட, 'ஹீரோ' ஆகி விடுவார்...' என்று ஏகத்துக்கு, 'பில்டப்' கொடுக்கிறார்.'ஏய் கிழவி... உனக்கு, வர வர ரொம்ப, 'நக்கலா' இருக்கு. எனக்குத்தான், சிலம்பரசன்னு அழகா பேரு வெச்சிருக்காங்கல்ல... நீ எதுக்கு எப்ப பாரு என்னை, 'தும்பு... தும்பு...'ன்னு கூப்பிடுறே... இரு... இரு... தாத்தாக்கிட்ட சொல்லி உன்னை கவனிக்க சொல்றேன்...''அதில்ல பேராண்டி... அந்த பேரு எல்லாம் என் வாயில் நுழையல; அதுமட்டுமல்ல... தெரு பசங்களோட அப்பப்ப வம்பு இழுத்துட்டு வர்றியா... அதுவே ஞாபகத்தில் இருக்க, அப்படி கூப்பிட்டுட்டேன், பேராண்டி. இனி, வம்பு தும்புக்கெல்லாம் போகாதடா என் ராசா...' என்று சமாதானப்படுத்தினார், பாட்டி.
சினி துளிகள்!
வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும், மாநாடு படப்பிடிப்பு துவங்கி விட்டது.
இவ்ளோதான்!