இயக்குனரான, மலையாள நடிகையர்!
மலையாள நடிகையான, ரம்யா நம்பீசன், சமீபத்தில், பெண்களுக்கு நேர்ந்து வரும் பாலியல் பிரச்னை குறித்து, ஒரு குறும்படம் இயக்கினார். அவரைத் தொடர்ந்து, 'மாஜி' கதாநாயகிகளில் கனிகா, ஒரு குறும்படமும், காவேரி, 'பியூச்சர் பிலிமும்' இயக்குகிறார். ரம்யா நம்பீசனைப் போன்று இவர்களும், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்த கதையைத்தான் படமாக்குகின்றனர்.—
சினிமா பொன்னையா புது மாப்பிள்ளையை, 'டீலில்' விட்ட, நடிகை!
சில ஆண்டுகளாகவே புதிய பட வாய்ப்பு இல்லாததால், கேரளாவில், நடன பள்ளி நடத்தி வரும், லட்சுமிமேனனுக்கு, டாக்டர் மாப்பிள்ளையை, திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஆயத்தமாகினர். அந்த நேரம் பார்த்து, தமிழில் இருந்து புதிய பட வாய்ப்பு தேடிச் சென்றதை அடுத்து, 'கல்யாணமும் வேண்டாம்; கச்சேரியும் வேண்டாம்; கலைச்சேவைக்கு தான் முதலிடம் கொடுப்பேன்...' என்று, அந்த மாப்பிள்ளையை, 'டீலில்' விட்டு, கோடம்பாக்கத்துக்கு ஓட்டமாக வந்து சேர்ந்து விட்டார், லட்சுமிமேனன். ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது!—
எலீசாஸ்ரீதிவ்யாவுக்கு, 'அட்வைஸ்!'
ஸ்ரீதிவ்யாவிற்கு நடிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டதால், 'செகண்ட் இன்னிங்சில்' தமன்னா 'ரேஞ்சு'க்கு, 'டூ-பீஸ்' நடிகையாக உருவெடுக்க ஆயத்தமானார். ஆனால், சில இயக்குனர்களிடம், தன் விருப்பத்தை அம்மணி சொன்னபோது, 'அப்படி நடிப்பதற்கெல்லாம் உடம்பில் ஒரு வடிவம் வேண்டும்; அது உங்களிடம் இல்லை. அதனால், வீணாக, 'ரிஸ்க்' எடுத்து, குடும்ப நடிகை என்று இருக்கிற, 'இமேஜை'யும் கெடுத்துக் கொள்ளாதீர்...' என்று, 'அட்வைஸ்' செய்துள்ளனர். இதனால், 'அடுத்த, 'ரவுண்டில்' இறங்கி அடிப்போம்...' என்று, பெரிய எதிர்பார்ப்புடன் ஆந்திராவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்த, ஸ்ரீதிவ்யா, பெருத்த ஏமாற்றத்துடன், 'ரிட்டர்ன்' ஆகி விட்டார். எல்லாரும் உயர்த்தினர் என்று, எலியும் தன் வாலை உயர்த்தியதாம்!—
எலீசாமேலாடை அணியாமல் நடித்த, கீர்த்தி சுரேஷ்!
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும், கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில், மோகன்லாலுடன் சரித்திர படத்தில், மேலாடை அணியாத, 'கெட் -அப்'பில் நடித்திருக்கிறார். 'என்ன தான் பல படங்களில் நடித்து விட்டபோதும், மேலாடை அணியாமல் நடித்தபோது, கூச்சமாக இருந்தது...' என்று சொல்லும், கீர்த்தி சுரேஷ், 'சிலர், என்னை அப்படி பார்க்க, ரொம்ப கவர்ச்சியாக இருப்பதாக சொல்கின்றனர். ஆனால், அந்த கதாபாத்திரமாக பார்க்கும்போது, அப்படி தெரியாது. அந்த அளவுக்கு, 'சென்டிமென்ட்' ஆன, 'பர்பாமென்ஸ்' கொடுத்துள்ளேன்...' என்கிறார்.கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!—
எலீசாகறுப்புப்பூனை!
தாரா நடிகையின், காதலர் படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமான, பாணா காத்தாடி நடிகையிடம், 'தாராவை முதன்மை நாயகியாக்கி, உங்களை, 'செகன்ட் ஹீரோயினி' ஆக்க திட்டமிட்டுள்ளனர்...' என்று, படக்குழுவில் ஒருவர், 'கிசுகிசு'த்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த, பாணா காத்தாடி நடிகை, படத்தில் நடிக்க, 'சைன்' பண்ணிவிட்ட போதும், 'மொத்த கதையையும் என்னிடம் சொல்ல வேண்டும்...' என்று அடம்பிடித்திருக்கிறார். ஆனால், தாராவின் காதலரோ, 'இன்னும், 'ஸ்கிரிப்டே' முடியவில்லை...' என்று இழுத்தடிக்கிறார். இதனால், தனக்கு கிடைத்த தகவல் உண்மை தான் என்பதை புரிந்து கொண்ட, பாணா காத்தாடி, 'மொத்த கதையையும் என்னிடம் சொல்லி, என் வேடம் திருப்தியாக இருந்தால் தான், படப்பிடிப்பு தளத்திற்கே வருவேன்...' என்று தாராவுக்கும், காதலருக்கும், பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார்.'பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு, 10ம் வகுப்பு மாணவி, சமந்தாவை நிற்க வைக்கப் போவதாக முன்பு வகுப்பாசிரியர் கூறினார் அல்லவா! ஆனால், இப்போ, தாராவை அந்த பதவிக்கு போட்டியிட வைத்து, துணை தலைவர் பதவிக்கு, சமந்தாவை நிற்க வைக்கப் போவதாக கூறுகிறாராம். இதனால், கோபித்துக் கொண்ட, சமந்தா பொண்ணு, 'தலைவர் பதவி என்றால், போட்டியிடுகிறேன்; இல்லாவிட்டால், வேறு எதிலும் போட்டியிட விருப்பமில்லை...' என்று சொல்லி விட்டாளாம்...' என்றாள், தோழி.
சினி துளிகள்
திருமணத்திற்கு பின், ஐதராபாத்தில், 'செட்டில்' ஆகி விட்டபோதும், சென்னை வரும்போது, தன் தோழி நயன்தாராவை சந்தித்து, மணிக்கணக்கில் அரட்டையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார், சமந்தா.
அவ்ளோதான்!