கோதாவில் குதிக்கும் சினேகாவின் கணவர்!
கதாநாயகன் மார்க்கெட் தடுமாறிய பின், தங்களை தற்காத்துக் கொள்ள, விஷால், சிவகார்த்திகேயன் மற்றும் விஷ்ணு என, சில நடிகர்கள், தயாரிப்பாளர்களாக உருவெடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கதாநாயகன் வாய்ப்பு இல்லாமல், வில்லனாக நடித்து வரும், சினேகாவின் கணவரான பிரசன்னாவும், விரைவில் தயாரிப்பாளராக உருவெடுத்து, குடை சாய்ந்து கிடக்கும் தன் கதாநாயகன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தப் போகிறார்.
சினிமா பொன்னையாமகிமா நம்பியார் கொடுத்த நெத்தியடி!
சாட்டை, குற்றம் 23 என, பல படங்களில் நடித்துள்ள, மலையாள நடிகை, மகிமா நம்பியாரிடம் சில இயக்குனர்கள், கவர்ச்சி கோதாவில் இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால், அவரோ, 'கவர்ச்சியை கண்களில் காட்டுகிறேன்; முகத்தில் காட்டுகிறேன். ஆனால், உடம்பில் காட்ட தயாராக இல்லை. கோடி ரூபாய் கொடுத்தாலும், கொள்கை மாற மாட்டேன். மேல் தட்டு கதாநாயகர்களின் படங்களாக இருந்தாலும், இதே நிபந்தனை தான்...' என்று, நெத்தியடியாக சொல்லி விட்டார்.—
எலீசாகண்களை கட்டி, சண்டை பயிற்சி!
நானும் ரவுடி தான் படத்தில், காது கேளாத பெண்ணாக நடித்த நயன்தாரா, தற்போது, நெற்றிக்கண் படத்தில், பார்வை இல்லாதவராக நடிக்கிறார். அதுவும் பழிவாங்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, சென்னையில் உள்ள பார்வையற்ற சில பிள்ளைகளின் இல்லங்களுக்கு சென்று, அவர்களின், 'மேனரிசத்தை' உள்வாங்கி நடித்திருக்கிறார், நயன்தாரா. அதோடு, இந்த படத்திலுள்ள சண்டை காட்சியில் நடிப்பதற்காக, கண்களை துணியால் கட்டியபடி, சண்டை செய்வது போன்று, ஒரு வாரமாக அவருக்கு பயிற்சி கொடுத்து, படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!—
எலீசா.காதலரை, 'பிரெண்டு' ஆக்கிய ஹன்சிகா!
நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவருமே சிம்புவின் காதலிகளாக இருந்து, பின் பிரிந்து சென்றவர்கள். அதன்பின், இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த சிம்பு, தற்போது, ஹன்சிகாவுடன், மஹா படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, 'மாஜி காதலருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?' என்று ஹன்சிகாவை கேட்டனர். 'மாஜி காதலர் என்று சொல்வதை விட, சிறந்த நண்பர் சிம்புவுடன் நடித்தது எப்படி இருந்தது என்று கேளுங்கள். காரணம், அவர், என் காதலராக இருந்தபோது, எங்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டது; ஆனால், நண்பரான பின், எந்த மனக்கசப்பும் இல்லை. ஒரு தோழியாக, சிம்புவுடன் நடித்தது, இனிமையான அனுபவமாக இருந்தது...' என்கிறார், ஹன்சிகா. கீழே விழுகிற மாப்பிள்ளைக்கு அரிவாள் மனையை முட்டுக் கொடுத்தது போல்!—
எலீசாபெண் போலீசுக்காக யோகிபாபு வைத்த கோரிக்கை!
பெண் போலீசுகளுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து, சிலர் படமெடுத்து வரும் நிலையில், காமெடியன் யோகிபாபு, ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 'பெண் போலீசுகள், பணி சுமையால் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதனால், அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது, பொதுமக்கள் தண்ணீர் கொடுங்கள்; அவர்களை உங்கள் சகோதரியாக நினைத்து, உங்கள் வீட்டு கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்...' என்று, ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இவரின் இந்த கோரிக்கை, சமூக வலைதளங்களில், 'டிரெண்டு' ஆகி வருகிறது.
- சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!
அந்த கேரளத்து வாரிசு நடிகைக்கு, தேசிய விருது கிடைத்த பின், மார்க்கெட் நிலை மந்தமாகி விட்டது. அதனால், மகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, கால்கட்டு போட்டு விட நினைக்கும், 'மாஜி' நடிகையான தாய்க்குலம், சத்தமில்லாமல் மாப்பிள்ளை வேட்டை நடத்தி வருகிறார். அவரது தேடுதல் வேட்டையில், ஒரு பிரபல கரை வேஷ்டியின் மகன் சிக்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதனால், கைவசம் உள்ள படங்களோடு, அம்மணி நடிப்புக்கு, 'டாடா' காட்டி விடுவார் என்று தெரிய வந்துள்ளது.'தேசிய அளவுல நடைபெற்ற கபடி போட்டியில் ஜெயிச்சு, விருது வாங்கிய, கீர்த்தி, அதன்பின் நடைபெற்ற எந்த போட்டியிலும் ஜெயிக்க முடியல. விளையாடிய வரை போதும், இனி, திருமணம் செய்துக்க சொல்லி, அவள் வீட்டில் வற்புறுத்துறாங்களாம்...' என்று, சக வீராங்கனையிடம் கூறினாள், கீர்த்தியின் தோழி.
சினி துளிகள்!
* ரஜினியின், அண்ணாத்த படத்தில், தான் அழுத்தமான ஒரு, 'சென்டிமென்ட்' வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார், கீர்த்தி சுரேஷ்* வேட்டையாடு விளையாடு - 2 படத்தில், கமலுடன் இணைகிறார், அனுஷ்கா
அவ்ளோதான்!