உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ஒரே படத்தில், ரஜினி - கமல்!

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் என, பல படங்களில் இணைந்து நடித்த, ரஜினியும், கமலும், அதன்பிறகு, எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில், ரஜினியின், 169வது படத்தை தயாரிக்கும், கமல், அப்படத்தில் தானும் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினியும், கமலும், மீண்டும் ஒரே படத்தில் இணையப்போகின்றனர்.சினிமா பொன்னையா

'ரீ-மிக்ஸ்' பாடல், கொதித்தெழுந்த ஏ.ஆர. ரஹ்மான்!

தன் முந்தைய, 'ஹிட்' பாடல்களை மீண்டும், 'ரீ - மிக்ஸ்' செய்யச் சொன்னால், 'அது ரொம்ப போர்...' என்று மறுத்து விடுவார், ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இந்த நேரத்தில், 2006ல், ஹிந்தியில் அவர் இசையமைத்த, டில்லி 6 என்ற படத்தில், இடம்பெற்ற, 'மசக்கலி...' என்று துவங்கும் பாடலை, தற்போது, அப்படக்குழு, மசக்கலி 2.0 என்ற பெயரில், 'ரீ - மிக்ஸ்' செய்து வெளியிட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த, ஏ.ஆர்.ரஹ்மான், 'பல இரவுகள் துாங்காமல், மூளையை கசக்கி உருவாக்கிய இந்த பாடலில், 200 இசைக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர், நடன மாஸ்டர், பாடலாசிரியர் என, பலரது உழைப்பு உள்ளது. அதனால், மசக்கலி பாடலின் ஒரிஜினல் பாடலை மட்டும் கேளுங்கள்...' என்று, ரசிகர்ளுக்கு வேண்டுகோள் விடுத்து, அதன், 'லிங்கை' தன் இணையத்தில் வெளியிட்டு, தன் பாடலை, 'ரீ - மிக்ஸ்' செய்தவர்களுக்கு, எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

தளபதி நடித்த மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கிய, மூன்றெழுத்து இயக்குனர், மீண்டும் அவரிடம் கதை சொல்ல, 'அப்பாயின்மென்ட்' கேட்டார். ஆனால், தளபதியோ, 'ஏற்கனவே என்னை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே, பழைய படங்களின் காப்பி தான். தொடர்ந்து காப்பியடித்த கதைகளில் நடித்தால், என், 'இமேஜ்' கண்டமாகி விடும்...' என்று சொல்லி, அந்த, இயக்குனருக்கு, 'கெட் - அவுட்' சொல்லி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்தவர், தளபதிக்கு தயார் பண்ணிய கதைகளுடன், வேறு சில, 'ஹீரோ'க்களிடம், 'கால்ஷூட்' கேட்டு வருகிறார்.'இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர், அட்லியோட பேர, இவனுக்கு வெச்சாலும் வெச்சாங்க, இவன் பண்ற அலம்பல் தாங்கலைடா மச்சான்... அதான், நம்ம விஜய், இவனை கழட்டி விட்டுட்டான்...' என்றான், நண்பன்.

சினி துளிகள்!

* குத்துச்சண்டை வீரராக, ஆர்யா நடிக்கும், சல்பேட்டா படத்தில், போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் அறிமுகமான, துஷாரா நாயகியாக நடிக்கிறார்.* காஞ்சனா படத்தை, ஹிந்தியில் அக் ஷய்குமாரை வைத்து, 'ரீ - மேக்' செய்துள்ள, ராகவா லாரன்ஸ், அந்த படத்தில், நாயகியாக நடித்துள்ள, கைரா அத்வானியை, தன் அடுத்த படத்தில் தமிழுக்கு கொண்டு வருகிறார்.* இதுவரை, 'பஞ்ச்' வசனம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த, அஜித், தற்போது நடித்து வரும், வலிமை படத்தில், இரண்டு அதிரடி, 'பஞ்ச்' வசனம் பேசி நடித்துள்ளார்.* பிகில் படத்தை போன்று, மாஸ்டர் படத்திலும், இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார், விஜய்.* தமிழில் தான் நடித்த, 'ஹிட்' படங்களை தெலுங்கில், 'டப்' செய்து வெளியிடுமாறு, சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தி வருகிறார், விஜய் சேதுபதி.* துப்பாக்கி மற்றும் ஜில்லா படங்களில், விஜய் உடன் நடித்த, காஜல் அகர்வால், மீண்டும், துப்பாக்கி - 2 படத்திலும் அவருடன் இணைகிறார்.* பிகினி' நடிகையாக வலம் வரும், ரகுல் பிரீத்சிங், காமெடி நாயகியாக, அடுத்த, 'ரவுண்ட்' ஆரம்பிக்க போகிறார்* இயக்குனர், அட்லி, அடுத்து ஒரு, 'ஆக் ஷன்' கதையை தயார் பண்ணி, சில மெகா, 'ஹீரோ'க்களிடம், 'கால்ஷூட்' கேட்டு வருகிறார்.* 'ரொமான்டிக்' நாயகனாக வலம் வரும், அதர்வா, குருதி ஆட்டம் படத்தில், தாதா வேடத்தில் நடிக்கிறார்.* விஜய் நடித்துள்ள, மாஸ்டர் படத்தில், நயன்தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன், இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !