உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ரசிகர்களுக்கு விஜய், 'அட்வைஸ்!'சமீபகாலமாக, விஜயை பற்றி, 'சோஷியல் மீடியா'வில், தேவையற்ற வாக்குவாதங்களை, சிலர் நடத்தி வருவதால், அதற்கு, தக்க பதிலடி கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர், அவரது ரசிகர்கள். ஆனால், அதற்கு தடை போட்டுள்ளார், விஜய். அதோடு, 'நம்மைப் பற்றி பேசினால், 'பப்ளிசிட்டி' கிடைக்கும் என்பதற்காக, சிலர், வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பர். அதனால், அதற்கு பதில் கொடுத்து, உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காமல், நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துங்கள். அது, கோடி நன்மை பெறும்...' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.— சினிமா பொன்னையாதெறிக்க விடும், ஸ்ருதிஹாசன்!'ஹீரோ' வாய்ப்புகள் குறைந்ததும், சில நடிகர்கள், அடுத்த வாய்ப்பாக, வில்லனாக நடிப்பதைப் போன்று, தற்போது, ஸ்ருதிஹாசனும் வில்லியாக நடிக்க தயாராக இருப்பதாக, தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு, 'எந்த நிபந்தனையும் போடாமல், கொடூர வில்லியாக நடிக்கவும் தயார்...' என்று, 'ஸ்டேட்மென்ட்' விட்டிருப்பவர், 'அப்படி நான் வில்லியாக நடித்தால், சாதாரணமாக இல்லாமல், அது தெறிக்க விடக்கூடிய வேடமாக இருக்க வேண்டும்...' என்றும், கோலிவுட் இயக்குனர்களுக்கு, கோடிட்டு காட்டியுள்ளார், ஸ்ருதிஹாசன். இட்டபடியே ஒழிய, ஆசைப்பட்டு பலன் இல்லை!— எலீசாலதா ரஜினிகாந்த் வெளியிட்ட, குழந்தைகள் பாடல்!'பீஸ் பார் சில்ட்ரன்ஸ்' -என்ற அமைப்பின் மூலம், குழந்தைகள் மேம்பாடு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார், லதா ரஜினிகாந்த். இந்நிலையில், தற்போது, குழந்தைகள் மற்றும் அன்பு குறித்து, 'அன்பு ஒன்று தான் உலகை வெல்லும்...' -என்ற ஒரு பாடலை எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளார். மேலும், டிக் டிக் டிக், அன்புள்ள ரஜினிகாந்த், மற்றும் வள்ளி என, சில படங்களிலும், இவர் பின்னணி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.— எலீசா உறுப்பு தானம் செய்யும், ஜெனிலியா!ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை, 2012ல் திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி விட்ட, நடிகை ஜெனிலியா, மீண்டும் சினிமாவில் நடிக்க அபிமானிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறார். சமீபத்தில், தன் கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ள, ஜெனிலியா, 'நமக்கு பிறகு வருபவர்களுக்கு, நாம் தரும் மிகப்பெரிய பரிசு இது. இப்படி செய்தால், இன்னொரு ஜென்மம் நாம், இந்த உலகில் வாழும் வாய்ப்பை பெறலாம். அதனால், இதை அனைவருமே செய்ய வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.- எலீசாபுலம்பித்தள்ளும், பரோட்டா சூரி!தான் நடிக்கும் படங்களில், 'நானெல்லாம், 'அட்வைஸ்' கொடுத்தால் சிரிச்சிருவாங்கப்பா...' -என்று சொல்லும், சூரி, 'கொரோனா' வைரஸ் தொற்று வந்தபோது, பொது மக்களுக்கு, 'அட்வைஸ்' கொடுத்து, ஒரு வீடியோ வெளியிட்டார். ஆனால், ஊரடங்கு நேரத்தில் அவர், தடை உத்தரவை மீறி, ஏரியில், மீன் பிடித்த விவகாரம் வெளியானதை அடுத்து, 'ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன், நாம் சரியாக இருக்க வேண்டும்...' என்று, பலரும், அவரை கிண்டல் செய்தனர். அதையடுத்து, 'காமெடியன், காமெடியனாகவே இருந்திருக்க வேண்டும். அதிகபிரசிங்கித்தனமாக கருத்து சொன்னால், இது தான் கதி...' என்று, புலம்பிக் கொண்டிருக்கிறார், பரோட்டா சூரி.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!திருமணத்திற்கு பிறகு, மீண்டும் உச்ச நடிகரின் புதிய படத்தில் நடித்து வருபவர், மீனம்மா நடிகை. தன், 'ஸ்லிம்' ஆன, 'ஆல்பம்' ஒன்றையும் சுற்றலில் விட்டார். இதையடுத்து, முன்பை விட அம்மணியின் அழகு மெருகேறி இருப்பதாக சொல்லி, சில இளவட்ட நடிகர்கள், தங்கள் படங்களில் அவரை நடிக்க வைத்தாவது, நெருக்கமான நட்பு வளர்த்து விடவேண்டும் என்று, படையெடுத்து வருகின்றனர். தற்போது, அம்மணி, பெங்களூரில் முகாமிட்டிருப்பதால், அவர் மீது அளவற்ற பிரியம் கொண்டுள்ள நடிகர்கள், தங்களது பட தயாரிப்பாளர்களுடன் அவரை, 'புக்' பண்ண நேரடி, 'விசிட்' அடித்துக் கொண்டிருக்கின்றனர். தனக்கு ஏற்பட்டுள்ள இந்த மவுசைப் பார்த்து அசந்து போன நடிகை, தேவைப்பட்டால், மிதமான, 'கிளாமர்' காண்பித்து நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக ஒப்புதல் கொடுத்து, 'போனஸ்' அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.'வேறொரு கிளையிலிருந்து, நம்ம வங்கி கிளைக்கு, 'டிரான்ஸ்பரில்' வந்துள்ள, மீனா பொண்ணு, ரொம்ப, 'ஸ்மார்ட்டா' இருக்கா... நம்ம ஆளுங்கள கேட்கவே வேண்டாம். சும்மாவாச்சும், அந்த பொண்ணு கவனத்தை ஈர்க்கறா மாதிரி, இப்படியும், அப்படியும் நடந்துட்டு இருக்காங்க.'மேனேஜரே, அப்பெண்ணை அடிக்கொரு தரம், தன் அறைக்கு வரவழைத்து ஏதோ குறிப்புகள் தருவது போல், பேச்சு வளர்த்துட்டு இருக்காரு.'மத்தவங்க சும்மா இருப்பாங்களா... மேனேஜரின் சிபாரிசில் அப்பெண்ணுடன் பேச, முயற்சி செய்துட்டு இருக்காங்க. நல்ல பொழுதுபோக்கா இருக்கு...' என்று தோழியர் இருவர் பேசிக் கொண்டனர். சினி துளிகள்!* 'தெறி படத்தில் நடித்த, என் மகள், நைனிகாவின் படிப்பு தடை படும் என்பதால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து தான், அவர் மீண்டும் நடிப்பார்...' என்று, கூறி வருகிறார், மீனா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !