இதப்படிங்க முதல்ல...
அஜித் பாணியில் களமிறங்கிய, ஜெய்! தமிழ் சினிமாவில், நடிகர் அஜித்குமார், 'கார் ரேஸ், பைக் ரேஸ்' மட்டுமின்றி, துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அதுபோல், நடிகர் ஜெய்யும், 'கார் ரேஸ்'களில் கலந்து கொள்கிறார். சினிமாவில், பட வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில், 'கார் ரேசில்' தீவிரமாக இறங்கி இருக்கும் ஜெய், 'பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதே, என் எண்ணம். அதனால், 24 மணி நேரமும், 'கார் ரேஸ்' பற்றியே யோசிக்கிறேன்; பயிற்சி எடுக்கிறேன். சினிமாவை தவிர, வேறு ஏதாவது துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிறபோது, எனக்கு, 'இன்ஸ்பிரேஷன்' ஆக இருந்தவர், அஜித்குமார் தான். அதனால்தான், அவரது பாணியில், 'கார் ரேசில்' சாதிக்க வேண்டும் என்று, களத்தில் இறங்கியுள்ளேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையாஅஞ்சலியின் துாண்டிலில், சிக்காத மீன்கள்!மேல்தட்டு நடிகர்களுக்கு துாண்டில் போட்டபடி காத்திருந்த, அஞ்சலியின் துாண்டிலில், எந்த மீனும் சிக்காததால், இப்போது, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தத் துவங்கி விட்டார். அதன் காரணமாக, சீனியர் சிட்டிசன்களுடன், 'ரொமான்ஸ்' செய்பவர், யோகிபாபுவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதைப்பார்த்து, 'டாப் நடிகர்களுடன் நடித்து, இப்படி, 'லோ கிளாஸ்' நடிகர்களுடன் இறங்கி விட்டீர்களே?' என்று, சக நடிகையர் கேட்டால், 'கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவை, யோகிபாபு காதலிக்கவில்லையா... அதே போல்தான் இதுவும்...' என்று, தன்னிடம் கிண்டலாக கேட்பவர்களுக்கு, 'நறுக்' பதில் கொடுத்து, வாயடைக்க வைக்கிறார். ஏடாகூடம் எப்படி என்றால், போகிறவள் தலையில் பொத்தென்று அடித்தது போன்று!— எலீசாதனுஷ், 'எஸ்கேப்!'சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், படம் இயக்குவது, தயாரிப்பது, பாடல் எழுதுவது, பின்னணி பாடுவது என்று, பல முகம் காட்டி வருகிறார், தனுஷ். முக்கியமாக, மற்ற 'ஹீரோ'களை வைத்து படங்களை தயாரிப்பதற்காக, 'வொண்டர் பார் பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தைத் துவங்கினார். ஆனால், இந்த பேனரில் தயாரிக்கப்பட்டு, ரஜினி நடித்த, காலா உட்பட சில படங்கள், அவரை காலை வாரி விட்டன. இதனால், பெரும் கடன்காரன் ஆகிவிட்டார், தனுஷ். அதையடுத்து பல படங்களில் தான் நடித்து, சம்பாதித்து, கடனை அடைத்தார். இப்போது யாராவது, இயக்குனர்கள், தயாரிப்பாளராகுமாறு தனுஷிடம் கோரிக்கை வைத்தால், 'ஒரு படத்தை தயாரித்தால், ஐந்து படங்களில் நடித்து அந்த கடனை அடைக்க வேண்டியுள்ளது. அதனால், இதுபோன்ற விஷப்பரிட்சையில் இனி, இறங்கப் போவதில்லை. நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா என்றே இருந்துவிடப் போகிறேன்...' என்று அவர்களிடமிருந்து, 'எஸ்கேப்' ஆகிறார்.— சி.பொ.,கெத்து காட்டும், சாய்பல்லவி!இப்போது வரை, மார்க்கெட்டில் சொல்லியடித்து வரும், சாய்பல்லவி, முன்னணி 'ஹீரோ'களுடன் நடிக்க, இயக்குனர்கள் அவரை தொடர்பு கொண்டால், சில நிபந்தனைகளை போடுகிறார். குறிப்பாக, 'பெரிய, 'ஹீரோ' படம் என்பதற்காக, என்னை, 'டம்மி' பண்ணக் கூடாது. கதையில், 'ஹீரோ'வுக்கு இணையாக, என் ரோலும் இருக்க வேண்டும்...' என்று, கெத்தாக பேசுகிறார். அதனால், சாய்பல்லவியை, தங்கள் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென்றால், முன்னணி, 'ஹீரோ'களாக இருந்தாலும், கதையில், அவருக்கும் சம உரிமை கொடுத்தால் மட்டுமே, அவருடன், 'டூயட்' பாட முடியும் என்ற நிலை இருப்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய யோசிக்கின்றனர். தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளி விடு!— எலீசாகமர்ஷியலுக்கு, 'கல்தா' கொடுக்கும், ஆர்யா!திருமணத்திற்கு பிறகு, பொறுப்பான நடிகராக மாறிவிட்ட, ஆர்யாவுக்கு, மகாமுனி படத்தில் நடித்ததற்காக, திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால், உற்சாகத்தில் மிதந்து வரும் ஆர்யா, 'இனிமேல், 'கமர்ஷியல்' மட்டுமின்றி, அவ்வப்போது விருதுக்கான படங்களிலும் நடிக்கப் போகிறேன். அதோடு, தனுஷ் போன்ற நடிகர்கள், ஒன்றுக்கு இரண்டு தேசிய விருது வாங்கி விட்ட நிலையில், ஒரு தேசிய விருதாவது வாங்கினால்தானே நமக்கு மரியாதை...' என்று சொல்லி, சில விருது பட இயக்குனர்களின் பின்னால் ஓடத் துவங்கியுள்ளார்.— சினிமா பொன்னையாசினி துளிகள்!* ரெஜினா, ராய்லட்சுமியைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டே, ஹன்சிகா போன்ற நடிகையரும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு தங்களது, 'சோஷியல் மீடியா'வில் விளம்பரம் செய்து வருகின்றனர். அதையடுத்து, இதுபோன்ற விளம்பரங்கள் செய்து, இளைஞர்களை தவறான பாதைக்கு திருப்புவதாக மேற்படி நடிகையர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.* பிக்பாஸ் - 4 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவரான, ஷிவானி, தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் தயாரித்து நடித்து வரும், விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அவ்ளோதான்!