இதப்படிங்க முதல்ல...
பாலிவுட்டை ஈர்த்த, விஜயின், 'டான்ஸ்!'தமிழ் சினிமாவில் அதிரடியான நடனமாடக் கூடியவரான விஜய், தற்போது, வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகப் போகிறார். தற்போது, ஹிந்தியில் பல படங்களை இயக்கிய, ரோஹித் ஷெட்டி, 'தமிழ் சினிமாவைச் சேர்ந்த ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களை வைத்து, படம் இயக்க விரும்புகிறேன்.'குறிப்பாக, விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகிய இருவரையும் இணைத்து படம் எடுத்தால், அந்த படம் செம மாஸாக இருக்கும். காரணம், இவர்கள் இருவருமே மிகச்சிறந்த, 'டான்சர்'கள். அதனால், எதிர்காலத்தில், இவர்கள் இருவரையும் இணைத்து, ஒரு மெகா படம் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்...' என்று, தெரிவித்துள்ளார்.—சினிமா பொன்னையா சினிமாவுக்கு, 'குட் பை'!டாக்டர் பட்டம் பெற்ற, சாய்பல்லவி, கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு ரவுண்டு வந்து விட்டார். தற்போது, கோயமுத்துாரில் மருத்துவமனை கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறார்.'அந்த மருத்துவமனையை கட்டி முடித்ததும், முழு நேர மருத்துவ சேவையில் இறங்கி விடுவேன்.தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும், சினிமாவுக்கு, 'குட் பை' சொல்லிடுவேன்...'என்கிறார், சாய்பல்லவி.— எலீசாதமிழ் படங்களின், 'ரீ - மேக்'கில், அபிஷேக் பச்சன்!தமிழில், பார்த்திபன் இயக்கி, படம் முழுக்க தான் ஒருவர் மட்டுமே நடித்து வெளியான படம், ஒத்த செருப்பு சைஸ்- 7. இந்த படத்தின் ஹிந்தி, 'ரீ - மேக்'கில், பார்த்திபன் நடித்த வேடத்தில் நடித்திருக்கிறார், அபிஷேக் பச்சன்.இதையடுத்து, தமிழில், 2019ல் வெளியான, கேடி என்ற படத்தின், ஹிந்தி, 'ரீ - மேக்'கிலும், அடுத்து நடிக்கப் போகிறார். 'இந்த படத்தில், 71 வயது முதியவராக, மு.ராமசாமி என்பவர் கதையின் நாயகனாக நடித்த வேடத்தில், ஹிந்தியில் நடிக்கப் போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தளபதி நடிகருடன் முதல் முறையாக ஜோடி போட்டுள்ள, அந்த புஷ்பா நடிகையை, நீண்ட காலமாகவே தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒரு இளவட்ட, 'ஹீரோ' தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால், நடிகையோ அடுத்தடுத்து சினிமாவில் பெரிய அளவுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர், அங்குள்ள சில மேல்தட்டு நடிகர்களுடன், 'அட்ஜஸ்ட்மென்ட்' விஷயத்தில் இறங்கி அடித்து வருகிறார்.இது தொடர்கதை ஆனதால், அம்மணி பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து விட்டார். ஆனால், இந்த விவகாரம் டோலிவுட்டில் உள்ள நடிகையின் காதலருக்கு தெரிய வர, செம கடுப்பாகி விட்டார். இனிமேலும், இந்த நடிகையுடன் காதலை தொடர்ந்தால், 'இமேஜ் டேமேஜ்' ஆகிவிடும் என்று, நடிகையை கழட்டி விட்டு விட்டார்.* சுள்ளான் நடிகரும், உச்ச நடிகரின் மூத்த வாரிசும், பிரிய போவதாக அறிவித்து விட்ட நிலையில், அதற்கான காரணத்தை அவர்கள், மிக ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால், அது குறித்த ஒரு தகவல், கோலிவுட்டில் தற்போது கசிந்து கொண்டிருக்கிறது.அதாவது, இதற்கு முன், கேரளாவைச் சார்ந்த பால் நடிகையுடன் நேசம் காட்டி வந்த நடிகர், இப்போது, பிரேமம் நடிகையுடன் நேசம் காட்டி வருகிறாராம். இது குறித்த ரகசிய தகவல்களை, உச்ச நடிகர் வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து விட்டார்களாம். இதனாலேயே, சுள்ளான் நடிகரை நிரந்தரமாக பிரிய முடிவு எடுத்தாராம், உச்ச நடிகரின் வாரிசு.சினி துளிகள்!* தமிழில், விஜயுடன், வாரிசு படத்தில் நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, அடுத்து, அல்லு அர்ஜுனின், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார்.* தெலுங்கில், வாத்தி படத்தில் நடித்துள்ள, தனுஷ், அடுத்தபடியாக, சேகர் கம்முலா என்ற தெலுங்கு இயக்குனரின் படத்திலும் நடிக்கப் போகிறார்.* மும்பையில், விபத்துக்களில் சிக்கும் தெரு நாய்களுக்கு, மருத்துவ உதவி செய்வதற்காக, தன் சொந்த செலவில், ஆம்புலன்ஸ் சேவையை துவங்கியிருக்கிறார், நடிகை சன்னி லியோன்.அவ்ளோதான்!