உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

இந்திக்கு செல்லும் கே.எஸ்.ரவிக்குமார்!கோச்சடையான் படத்தில், மேற் பார்வை இயக்குனராக பணியாற்றும் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து, தமிழில், விக்ரம் நடிப்பில் வெளியான, சாமி படத்தை, இந்தியில், ரீ-மேக் செய்கிறார். சஞ்சய் தத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக் கிறார். '3' படத்துக்கு இசையமைத்த, 'கொலை வெறி...' அனிருத் இப் படத்திற்கும், இசையமைக்கிறார்.— சினிமா பொன்னையா.மது ஷாலினிக்கு புகை பயிற்சி!ராம் கோபால் வர்மா இயக்கி வரும், டிப்பார்ட்மென்ட் என்ற இந்தி படத்தில், மது ஷாலினிக்கு, ரவுடி கூட்டத்தின் தலைவி வேடம். கதைப்படி, அவர் சிகரட் புகையை ஊதியபடி நடிக்க வேண்டும் என்பதால், சிகரட், பிடிக்கவே, அவருக்கு, ஒரு வாரம் பயிற்சி கொடுத்துள்ளார் இயக்குனர். அந்த வகையில், தினமும், 20 - 30 சிகரட் வரை, ஊதி தள்ளியபடி அப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சொல்கிறவனுக்கு வாய்ச் சொல், செய்கிறவனுக்கு தலைச் சுமை! — எலீசா.ரீ-மேக் படத்திலிருந்து ரிச்சா விலகல்!தமிழில், தான் இயக்கிய, 'திருட்டுப் பயலே' படத்தை இந்தியில், ரீ-மேக் செய்து வருகிறார் சுசி கணேசன். இப்படத்தில், தமிழில் மாளவிகா நடித்த ரோலில் நடிக்க, முதலில் கமிட் ஆனார் ரிச்சா. ஆனால், அது ஒரு ஆணுடன் தவறான உறவு வைத்திருக்கும் கேரக்டர் என்பதை அறிந்து, அப்படத்திலிருந்து விலகி விட்டார். அதனால், இப்போது அந்த வேடத்துக்கு வேறு நடிகையை தேடி வருகிறார் இயக்குனர். வேண்டி வேண்டிக் கொடுத்தாலும், வேண்டாம் என்றார் போல்!— எலீசா.மீண்டும் ஜெய் - அஞ்சலி!தமிழில் வெளியான, எங்கேயும் எப்போதும் படம் தெலுங்கில், தி ஜார்னி என்ற பெயரில், 'டப்' செய்யப் பட்டு வெற்றி பெற்றிருக் கிறது. இதனால், அங் கிருந்து ஒரு மெகா கம்பெனி தயாரிக்கும் பட வாய்ப்பு, ஜெய் - அஞ்சலி ஜோடிக்கு கிடைத்திருக் கிறது. இருவருமே, பிப்ரவரி மாதத்தில் அப்படத்தில் நடிக்க, கால்ஷீட் கொடுத் திருக்கின்றனர்.— சி.பொ.,நண்பன் படத்தையடுத்து, தமிழில் பல படங்கள் கமிட் ஆகும் என்று எதிர்பார்த்திருந்தார் இலியானா; ஆனால், புதிய படங்கள் எதுவுமே அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், தெலுங் கில் கிடைத்த ஒரு படத்தை கைப்பற்றி, நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வெறுப்பில், 'நண்பன்' படத்தின் ஆடியோ விழாவுக்கு கூட வராமல், டேக்கா கொடுத்து விட்டார். தாளுக்கும் அகப்படாமல், தாழ்ப்பாளுக்கும் அகப்படாமல்...— எலீசா.நானும் தமிழன் தான் என்கிறார் ரஹ்மான்!'டேம் 999' படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருப்பதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்திருப்பதால், சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அது குறித்து, ரஹ்மான் விடுத்துள்ள அறிக்கையில், 'நானும், ஆஸ்கர் விருது பெற்றவன் என்ற முறையில், அப்படம் குறித்து, என்னிடம் கருத்து கேட்கப்பட்டது; அதனால், மரியாதை நிமித்தமாக, வாழ்த்து தெரிவித்தேன். மற்றபடி, தமிழன் என்ற முறையில், முல்லை பெரியாறு விவகாரத்தில், தமிழர்களுக்குள்ள அதே உணர்வு, எனக்கும் உள்ளது...' என்று தெரிவித்துள்ளார்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !