உள்ளூர் செய்திகள்

முதல் திருநங்கை மருத்துவர்!

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் என்று போற்றப்படுகிறார், வி.எஸ்.பிரியா. ஆயுர்வேத டாக்டர் ஜினு சசிதரன், பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த, தன் உடல் அமைப்பை அம்பலப்படுத்தியுள்ளார்.மருத்துவர் ஆன பிறகு, 'நான் ஒரு திருநங்கை என்பதை தெரிவித்து, மிகவும் சிரமமான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு பெண் உருவம் பெற்றேன். மேலும், என்னைப் போன்ற உடல் கோளாறு உள்ளவர்களை, பெற்றோர், வீட்டை விட்டு வெளியேற்றி விட்டால், அவர்கள் தெருக்களில் அலைந்து தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விடுகின்றனர் அப்படிப்பட்டவர்களை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம்... ' என்கிறார், திரிச்சூர்வாசியான, பிரியா.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !